பார்த்திபனை மீண்டும் வம்பு இழுக்கும் வகையில் ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு இருக்கும் டீவ்ட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விமர்சகர் ப்ளூ சட்டை மாறனை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ விமர்சனம் மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என்று யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார்.
நடிகர்கள் முதல் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் என யாரையும் விட்டுவைக்காமல் விமர்சித்து இருக்கிறார். மேலும், இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் பார்த்திபன் நடித்து இயக்கி வெளிவந்திருந்த இரவின் நிழல் படத்தை மோசமாக விமர்சித்து இருந்தார். தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன்.
இரவின் நிழல் படம்:
கடந்த ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த படம் இரவின் நிழல். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து இருந்தார். மேலும், இந்த படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் பார்த்திபன் நடித்தும் இருந்தார். அகிரா புரோடக்சன் தான் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. ஆனால், வழக்கம் போல் இந்த படத்தை தாறுமாறாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து இருந்தார்.
பார்த்திபன் பதிவு:
இந்த படத்தை குறித்து பல்வேறு குறைகளையும் கூறியிருந்தார். அதற்கு பார்த்திபன் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருது விழாவில் இரவின் நிழல் படத்தில் இடம்பெற்ற மாயவா துயவா என்ற பாடலுக்கு தேசிய விருது வழங்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பார்த்திபன், எத்தனையோ சர்வதேச விருதுகளை இரவின் நிழல் வென்றபோதும், நமது தேசிய விருதுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.. இரவின் நிழல் படத்தின் பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை ஸ்ரேயா கோஷலுக்கு அறிவித்தது நன்றி என்று கூறி இருந்தார்.
ப்ளூ சட்டை மாறன் பதிவு ;
இந்த நிலையில் இதை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், பார்த்திபன் சார்.. நீங்கள் வாங்கிய 120 சர்வதோசை விருதுகள் எந்தெந்த தேதிகளில் வழங்கப்பட்டன? ஒவ்வொன்றிற்குமான அதிகாரப்பூர்வ வெப்சைட் பட்டியலை வெளியிடுவீர்களா? இந்த சர்வதேச விருதுகளை வழங்கியவர்கள் யார்? அவற்றின் அல்லது அவர்களின் பெயரென்ன? 120 விருது கமிட்டிகளின் தலைவர் அல்லது பொறுப்பாளர்கள் கையெழுத்திட்ட உண்மையான சான்றிதழ்களை ப்ரெஸ் மீட் வைத்து நிருபர்களுக்கு காட்ட முடியுமா? ஒவ்வொரு விருது அமைப்பும் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?ஆம். நாங்கள் தான் விருது தந்தோம் என 120 விருது கமிட்டிகளின் தலைவர்கள் அல்லது பொறுப்பாளர்கள் .
பார்த்திபன் சார்.. நீங்கள் வாங்கிய 120 சர்வதோசை விருதுகள் எந்தெந்த தேதிகளில் வழங்கப்பட்டன? ஒவ்வொன்றிற்குமான அதிகாரப்பூர்வ வெப்சைட் பட்டியலை வெளியிடுவீர்களா?
— Blue Sattai Maran (@tamiltalkies) August 26, 2023
இந்த சர்வதேச விருதுகளை வழங்கியவர்கள் யார்? அவற்றின் அல்லது அவர்களின் பெயரென்ன?
120 விருது கமிட்டிகளின் தலைவர் அல்லது… pic.twitter.com/1KGoTmL1Ij
வம்பிழுத்து இருக்கும் மாறன்:
வீடியோ மூலம் பேட்டி தந்து உங்கள் மீதான சந்தேகத்தை போக்குவார்களா? ஒவ்வொரு கேள்விக்கும் மனசாட்சியுடன் நேர்மையா பதில் சொல்லுங்க சார். இல்லைன்னா நீங்க சொன்னது பச்சைப்பொய் என்றுதான் அனைத்து தமிழர்களாலும் உணரப்படும். இந்த ஆதாரங்களை திரட்டித்தர ஒருநாளே அதிகம். இதை உங்கள் உதவியாளர்கள் எளிதில் செய்து விடலாம். புதிய தகவலை தேட அவசியமே இல்லை. விருது வாங்கியதற்கான அங்கீகாரங்கள் உங்களுக்கு மெயில் மூலம் வந்திருக்கும். அவற்றை மீடியாவுக்கு forward செய்தாலே போதும். கணக்கு 120 ஆக இருக்க வேண்டும். ஒன்று குறைந்தாலும் நீங்கள் கூறிய அனைத்தும் பொய் என்றே பொருள்படும். Your second countdown starts NOW” என்று கூறி இருக்கிறார்.