‘ரகு தாத்தா’ பட விமர்சனத்தில் ஹிந்தி திணிப்பை பற்றி ப்ளூ சட்டை மாறன் கொடுத்த விளக்கம்

0
282
- Advertisement -

சமீபத்தில் வெளியான ‘ரகு தாத்தா’ படம் குறித்து பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விமர்சித்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளிவந்த படம் தான் ரகு தாத்தா. இப்படத்தை புது இயக்குனர் சுமன் குமார் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் கீர்த்தியுடன் இணைந்து தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர்.

-விளம்பரம்-

படத்தில் 1970களில் வாழும் முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்ணாக கயல்விழி (கீர்த்தி சுரேஷ்) இருக்கிறார். சிறுவயதிலிருந்தே ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராடும் இவர் தனது ஊரில் உள்ள அனைத்து பெண்களுக்கும் முன்மாதிரியாக விளங்குகிறார். வங்கியில் வேலை செய்யும் கயல்விழிக்கு திருமணம் முடிப்பதில் சுத்தமாக விருப்பமில்லை. ஆனால், தனது தாத்தாவின் ஆசைக்காக கயல்விழி திருமணத்திற்கு சம்மதிக்கிறார். பின் வீட்டில் வரன் பார்க்கத் தொடங்கியவுடன், நமக்கு தெரியாத ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்கு பதிலாக, தான் நன்கு பழகிய தமிழ்ச்செல்வனை திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்.

- Advertisement -

ரகு தாத்தா:

கடைசியில், தமிழ்ச்செல்வன் அனைத்து ஆண்களைப் போல பிற்போக்கு சிந்தனை கொண்டவர் என்று கயல்விழிக்கு தெரிய வருகிறது. அதனால் முடிவு செய்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று நிறைய போராடுகிறார். அதனால் தமிழ்ச்செல்வன் இடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று கயல்விழி கல்கத்தாவிற்கு பணியிடை மாற்றம் செய்து கொண்டு போக முடிவு செய்கிறார். பின் இத்தனை நாளாக தான் எதிர்த்த ஹிந்தி பரிட்சையை எழுத முயற்சி செய்கிறார். கடைசியில், கயல்விழி தன் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள ஹிந்தி பயின்றாரா? கயல்விழிக்கு திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதுதான் மீதி கதை.

ப்ளூ சட்டை மாறன் வீடியோ:

இந்நிலையில் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். ரகு தாத்தா படம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், படம் எதை நோக்கி செல்கிறது என்று புரிந்து கொள்ள முடியவில்லை. படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு போராளியாக இருந்து கொண்டு, எதற்காக ஒளிந்து மறைந்து போராடுகிறார். படத்தில் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் ஒழுங்காக டிசைன் செய்யவில்லை. இந்தப் படம் காமெடி படமா, இல்லை சீரியஸ் படமா என்று கண்டுபிடிக்கவே பாதி படம் போய்விட்டது. அப்புறம்தான் சீரியஸாக காமெடி பண்ணி நம்மளை வெறுப்பேத்தி இருக்கிறார்கள் என்று தெரிந்தது.

-விளம்பரம்-

படம் குறித்து சொன்னது :

ஒரு ஷார்ட் பிலிம் கதையை நீட்டி ஜவ்வு மிட்டாய் மாதிரி படத்தை எடுத்திருக்கிறார்கள். படத்தில் ஹிந்தி திணிப்பையாவது விரிவாக பேசி இருக்கலாம். நாங்கள் ஹிந்தியை எதிர்க்கல, ஹிந்தியை திணிப்பது தான் எதிர்க்கிறோம் என்று மேலோட்டமாக சொல்லி இருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு வந்த போது நமது மொழிகளில் ஆங்கிலம் கலந்து விட்டது. இப்போ நம்ம ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசுவது கிடையாது. இந்த சூழ்நிலையில் ஹிந்தியும் கலந்தால், தமிழ் மாதிரி ஒரு பாஷையை தான் பேசுவோமே தவிர, தமிழைப் பேச மாட்டோம். இதுபோல ஒரு மொழி அழிந்தால் அந்த மக்களின் கலாச்சாரம், பண்பாடு, அடையாளம் எல்லாமே அழிந்துவிடும்.

படம் நம்மை சோதிக்கின்றது:

உதாரணத்திற்கு, ஒரு சில மாநிலங்கள் இந்தியை அனுமதித்ததால், அந்த மாநிலத்தினுடைய தாய்மொழி அழிந்து ஹிந்தி தான் டாமினேட் செய்து கொண்டிருக்கிறது. அந்த நிலைமை தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என்று தான் ஹிந்தி திணிப்பை நாம் எதிர்த்தோம். அந்தக் கருத்தை இந்த படத்தில் கொஞ்சம் விரிவாக சொல்லிருக்கலாம். மத்தபடி லைட்டான சப்ஜெக்ட்டை எடுத்து, கூட கொஞ்சம் காமெடி பண்ணி ஒர்க் அவுட் பண்ணிடலாம்னு படக்குழுவினர் நினைத்து இருக்கிறார்கள். ஆனா, அது கொஞ்சம் கூட ஒர்க் அவுட் ஆகல, சோதித்து தான் இருக்கிறது என்று கூறியுள்ளார். தற்போது ப்ளூ சட்டை மாறன் கருத்துக்கு ஆதரவாக இணையவாசிகள், நீங்கள் விமர்சனத்தோடு மொழி திணிப்பு குறித்துக் கூறியிருக்கும் விஷயங்கள் அருமை என்று பாராட்டி வருகிறார்கள்.

Advertisement