மாநாடு படத்தின் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு பதிலடி கொடுத்துள்ளார். பல போராட்டங்களுக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் கடந்த 25 ஆம் தேதி வெளியாகி இருந்தது இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். யுவன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். இந்த படத்தில் டைம் லூப் என்ற ஒரு புதிய கான்செப்ட்டை அழகாக கையாண்டிருக்கிறார் இயக்குனர். ஒரு நாள் மீண்டும் மீண்டும் நடப்பது தான் டைம் லூப்.

சமீபத்தில் வெளிவந்த ஜாங்கோ திரைப்படமும் டைம் லூப் கான்செப்ட் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், திரில்லர் மற்றும் அறிவியல் புனைவு இரண்டையுமே கொண்ட படமாக மாநாடு அமைந்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் மாநாடு படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் ரிவியூ கொடுத்து இருந்தார்.

இதையும் பாருங்க : பிரியங்காவை தள்ளியும் விட்டுவிட்டு யார் தள்ளியது என்று கேட்ட அவரின் டீம் மேட் – இதோ வீடியோவை பாருங்க.

Advertisement

அதில், படத்தில் முதலமைச்சரை காப்பாற்றுவது தான் சிம்புவின் எண்ணம், ஆனால் முதலமைச்சரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் பார்க்கும் ரசிகர்களுக்கு தோன்றவில்லை. ஏனென்றால், முதலமைச்சர் எவ்வளவு முக்கியமானவர் என்பதை காண்பிக்கவில்லை என்று கூறி இருந்தார். மாறனின் இந்த விமர்சனத்திற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, ‘எனக்கு தெரிந்து அவர் கதையே பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்.

அப்துல் காலிக்கிற்கு, முதலமைச்சரை கொள்வது பிரச்சனை இல்லை. ஆனால், அது ஒரு மாநாட்டில் நடந்தால் தான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மீது பழி போட்டு கலவரம் நடக்கும். அது நடக்கக்கூடாது என்பது தான் அவரின் நோக்கம். ஆனால், அது அவருக்கு புரியவில்லை. உண்மையில் இவர் படம் பார்த்தாரா இல்லை வேறு யாராவது பாத்துட்டு வந்து இவருக்கு கத சொன்னாங்களானு தெரியல என்று கூறி இருந்தார்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் வெங்கட் பிரபுவின் இந்த பதில் குறித்து பேசியுள்ள மாறன் ‘அவர் சொன்னது அப்படியே எடுத்துக்குவோம் அவர் சொல்ல வந்தது அது நான் புரிந்து கொண்டது இது அதில் என்ன தப்பு இருக்கு எனக்கு ஒரு விஷயத்தைப் புரிய வைக்க வில்லை என்றால் அது உங்களுடைய தப்பு தான் நான் காசு கொடுத்து படம் பார்க்கிறேன் நான் சரியாக புரிந்து கொள்வேன் தவறாக புரிந்து கொள்வேன் அதனால் உங்களுக்கு என்ன’ என்று கூறியுள்ளார்

Advertisement
Advertisement