’12 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த இந்த படமே’ – மத கஜ ராஜாவுக்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்த ப்ளூ சட்டை

0
160
- Advertisement -

‘மத கஜ ராஜா’ படத்திற்கு பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்திருக்கும் செய்தி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தான் மதகஜராஜா. இந்த படத்தில் விஷாலுடன் சந்தானம், சோனு சூட், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு உட்பட பலர் நடித்து இருந்தார்கள். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார்.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் இந்த படம் 2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுவதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனை ஏற்பட்டதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. சமீபத்தில் தான் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா படம் வெளியாக இருப்பதாக அறித்திருந்தார்கள். அதன்படி 12 வருடம் கழித்து நேற்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இப்படம் வெளியாகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் சிறு வயதிலிருந்தே விஷால், சந்தானம், சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா ஆகியோர் நண்பர்களாக இருக்கின்றனர்.

- Advertisement -

மத கஜ ராஜா கதை:

வெவ்வேறு ஊர்களில் வசிப்பவர்கள் ஒரு திருமணத்தில் மீண்டும் சந்திக்கும் போது தன் நண்பர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் உள்ளதை விஷால் அறிகிறார். முக்கியமாக சடகோபன் ரமேஷ் மற்றும் நிதின் சத்யா ஆகிய இருவரும் ஒரே நபரால் பாதிக்கப்பட்டு இருப்பதைத் தெரிந்து கொண்ட விஷால் அதை தீர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். அப்படி அவர்கள் என்ன பிரச்சனையில் சிக்கியிருக்கிறார்கள்? விஷால் தன் நண்பர்களுடன் இணைந்து அந்த பிரச்சனையை சரி செய்தாரா? என்பதுதான் படத்தின் கதை.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்:

இந்நிலையில், தற்போது பிரபல சினிமா விமர்சகர் மதகஜராஜா படத்திற்கு விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில், 12 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த இந்த படமே நன்றாக இருக்கிறது. ஆனால், சமீபகாலமாக படங்கள் என்கிற பெயர்களில் பல குப்பை படங்களை எடுத்து வருகிறார்கள். படத்தில் இருக்கும் 60 சீனில் அனைத்து சீன்களுமா நல்லா இருக்கணும்னு ஆசைப்படுகிறோம். நறுக்கென ஒரு நாலு சீன் நல்லா இருந்தா போதுமே.

-விளம்பரம்-

பாசிட்டிவ் விமர்சனம்:

அந்த நறுக்குன்னு 4 சீன் இந்தப் படத்தில் தாராளமாகவே இருக்கிறது. மேலும், வரலட்சுமி சரத்குமார் மற்றும் அஞ்சலி என 2 ஹீரோயின்களையும் எந்த அளவுக்கு கவர்ச்சியாக காட்ட முடியுமோ அந்த அளவுக்கு கிளாமராக சுந்தர் சி இந்த படத்தில் காட்டி இருக்கிறார். இந்தப் படத்தை குழந்தைகளுடன் பார்க்க வேண்டுமா? வேண்டாமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஓடிடியில் பல ஏ சான்றிதழ் படங்களை நடு வீட்டில் ஓடும் போது, இந்தப் படத்தை தாராளமாக தியேட்டரிலேயே பார்க்கலாம்.

சந்தானம் குறித்து:

குறிப்பாக இந்த படத்தில் சந்தானத்தின் டைமிங் பஞ்ச் காமெடி எல்லாம் ரசிகர்கள் ரொம்பவே மிஸ் செய்கிறார்கள். இந்தப் படம் விஷால் படமா? இல்லை சந்தானம் படமா? என யோசிக்க வைக்கும் அளவுக்கு காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. இந்தப் படம் நல்லா இருக்கு என்று சொல்ல காரணமே சந்தானத்தின் காமெடிதான். அதேபோல், விஜய் ஆண்டனி படங்களில் நடிக்காமல் இந்த படத்துக்கு போட்டதை போலவே பாடல்களை போட்டு இசையமைப்பாளராகவே இருந்திருக்கலாம் என்று பாராட்டியிருக்கிறார்.

Advertisement