பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், ‘அமரன்’ விமர்சனத்தில் சிவகார்த்திகேயனை தாக்கி பேசியிருக்கும் விஷயம் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ராணுவத்தில் வீர மரணம் அடைந்த மேஜர் முகூர்த்த வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் திரைப்படம் தான் அமரன். இந்தப் படத்தில் முகுந்தாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவி நடித்திருக்கிறார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
மேலும், இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில், மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ராணுவத்தில் இணைய வேண்டும் என்கிற ஆசை எப்படி வந்தது. அதற்காக அவர் வீட்டில் சந்தித்த எதிர்ப்புகள் என்ன? இதற்கு இடையே, மேஜர் முகுந்த் வரதராஜனுக்கும் அவரது மனைவி இந்துவுக்கும் காதல் மலர்ந்தது எப்படி? ராணுவத்தில் முகுந்த் செய்த சாகசங்கள் என்ன? காஷ்மீரில் ஏன் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்கள் தான் ‘அமரன்’ படத்தில் கதை. தீபாவளிக்கு வெளியான இப்படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.
ப்ளூ சட்டை மாறன்:
இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் சமீபத்தில் இப்படத்திற்கு விமர்சனம் அளித்துள்ளார்.
அதில், சிவகார்த்திகேயனின் அமரன் படத்தில் ஏகப்பட்ட சொதப்பல்கள் உள்ளதாகவும் திடீர் தளபதி சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக மாறி முடிந்தவரை நல்லா நடிக்க முயற்சித்துள்ளார். ஆனால், ராணுவம் சார்ந்த விஷயத்தில் எந்த ஒரு டீட்டெய்லிங்கும் பெரிதாக இல்லை என்றும், இது முழுக்க முழுக்க உண்மை கதை கிடையாது. சினிமாவுக்காக ஏகப்பட்ட மசாலாக்களை இயக்குனர் செய்திருக்கிறார் என ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.
பாசிட்டிவ் விமர்சனம்:
மேலும், 50 சதவீதம் மட்டுமே நல்லா இருக்கும் இந்த படத்தை 100 சதவீதமாக மாற்றி இருப்பது சாய் பல்லவி தான் என்றும், அவர் இல்லை என்றால் அமரன் படம் அம்போ தான் என ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்துக்கு நடுவே சாய் பல்லவிக்கு உண்டான பாராட்டுகளையும் கொடுத்துள்ளார். இப்படி சிவகார்த்திகேயன் படத்துக்கு ப்ளூ சட்டை மாறனிடம் இருந்து இந்த அளவுக்கு ஒரு பாசிட்டிவ் விமர்சனம் வந்ததே பெரிய விஷயம் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
வன்மத்தை கக்கிய ப்ளூ சட்டை மாறன்:
ஆனால், படத்தின் விமர்சனத்தை தாண்டி சிவகார்த்திகேயன் குறித்த தனிப்பட்ட கருத்துக்களையும் ப்ளூ சட்டை மாறன் பேசியுள்ளார். அதில், என்ன பண்ணியும் என்ன பிரயோஜனம். காசிக்கு போனாலும் கருமம் தொலையாதுங்கிற மாதிரி ஒரு மேட்டர்ல மாட்டிகிட்டு இருக்காரு. மங்கள்வாரம் என்கிற ஒரு படம் தமிழ்ல ‘செவ்வாய்க்கிழமை’ என்ற பெயரில் வெளியானது. அந்த விமர்சனத்தில் ‘கள்ளக்காதல் தொடர்புடைய எல்லாரும் செவ்வாய்க்கு கிழமை இறந்துவிடுகிறார்கள் என்று கூறி இருந்தோம்.
எத கொண்டாந்து எதோட
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) November 1, 2024
சேர்க்கிறான் இவன்…
வரவர உன் ரிவ்யூ எல்லாம் ரொம்ப பேடா போயிட்டு இருக்கு…#Amaran pic.twitter.com/p3lwKh2D1E
கொந்தளித்த SK ரசிகர்கள்:
அந்த விமர்சனத்தின் கீழ் ஒரு தம்பி ‘அப்போ செவ்வாய் கிழமை சிவகார்த்திகேயன் செத்துப்போயிடுவாரான்னு கமன்ட்ல கேக்குறான். இதெல்லாம் தப்புடா தம்பி என்று சிவகார்த்திகேயனை தாக்கி பேசியுள்ளார். இதைக் கேட்ட சிவகார்த்திகேயன் ரசிகர்கள், ப்ளூ சட்டை மாறன் இப்படி பேசி இருப்பதற்கு முழுக்க முழுக்க வன்மம் மட்டுமே காரணம் என அவரை கண்டித்து வருகின்றனர். அதோடு நீங்கள் என்ன கதறினாலும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் பிளாக்பஸ்டர் தான் என்றும் உண்மை கதையை உங்க இஷ்டத்துக்கும் மாற்ற முடியாது மிஸ்டர் மாறன் என்றும் ஏகப்பட்ட கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.