விமர்சன வீடியோவிற்கு முன்பே மீம் போட்டு ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தை வச்சி செய்த ப்ளூ சட்டை மாறன்.

0
484
maran
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

இதற்காக அவர்கள் இவர் ஒரு படம் எடுத்தால் தான் அதனுடைய கஷ்டம் தெரியும் என்றும் கூறினர். இப்படி ஒரு நிலையில் இவர் ‘ஆன்டி இந்தியன்’ படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகும் முன்னரே பல பிரச்சனைகளை சந்தித்து. இருப்பினும் இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆன்டி இந்தியன் படத்திற்கு பின் இவர் விமர்சனம் செய்வாரா என்ற கேள்வி எழுந்தது.

- Advertisement -

அஸ்வினின் என்ன சொல்ல போகிறாய் :

ஆனால், படம் எடுக்க சென்றாலும் மீண்டும் தனது விமர்சன பணியை செய்து வருகிறார் மாறன். இப்படி ஒரு நிலையில் அஸ்வின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படம் குறித்து மீம் ஒன்றை போட்டுள்ளார் மாறன். குக்கு வித் கோமாளிஅஸ்வின் முதன் முறையாக ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இயக்குனர் ஹரிஹரன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். மேலும், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள்.

எப்படி இருக்கிறது படம் :

தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா, குக்குவித் கோமாளி புகழ் என்று பலர் நடித்துள்ள இந்த படம் இன்று வெளியாகி இருக்கிறது. படத்தின் இசை வெளியிட்டு விழாவில் அஸ்வின் பேசிய பேச்சு கேலிக்கு உள்ளாகி பின் பல சர்ச்சைகளுக்கு பின் இன்று இந்த படம் வெளியாகி இருக்கிறது. ஹீரோவான அஸ்வின் திருமணம் செய்துகொள்ள திட்டமிடுகிறார். அவருக்கு பார்க்கும் பெண் தனக்கு வரும் கணவர் ஏற்கனவே காதல் தோல்வி அடைந்தவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

-விளம்பரம்-

ப்ளூ சட்டையின் மீம் :

ஆனால், அஸ்வினுக்கு அப்படி எதுவும் காதல் தோல்வி இல்லாததால் மற்றொரு நாயகியை இவர் தான் தன் முன்னாள் காதலி என்று அறிமுகம் செய்து வைக்கிறார். பின் அவரிடமே காதலில் விழுகிறார் அஸ்வின். இறுதியில் அஸ்வினுக்கு எந்த நாயகியுடன் திருமணம் நடந்தது என்பது தான் படத்தின் கதை. இந்த படத்திற்கு பெருமளவு நெகட்டிவ் விமர்சனம் தான் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் இந்த படம் குறித்து மீம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

விமர்சனத்திற்கு ரசிகர்கள் வைட்டிங் :

பொதுவாக ஒரு படம் வெளியான பின்னர் இவரது விமர்சனத்திற்கு தான் ரசிகர்கள் பலரும் காத்துகொண்டு இருப்பார்கள். அதிலும் மொக்கை படம் என்றால் சொல்லவே வேண்டியது இல்லை. படம் பார்த்தவர்கள் கூட இவரது விமர்சனத்தை பார்த்தால் தான் கொஞ்சம் திருப்தி அடைவார்கள். இப்படி ஒரு நிலையில் என்ன சொல்ல போகிறாய் படத்தின் விமர்சனத்தை வெளியிடுவதற்கு முன்பாகவே மாறன் இப்படி ஒரு மீம் வெளியிட்டு உள்ளதை பார்த்த ரசிகர்கள் இந்த படத்தின் விமர்சனத்திற்கு காத்துகொண்டு இருக்கிறன்றனர்.

Advertisement