விஜய்யை விமர்சித்த ஷாநவாஸை கண்டிக்க எந்த நடிகருக்கும் திராணி இல்லை – கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்

0
166
- Advertisement -

தளபதி விஜய்க்கு ஆதரவாக ப்ளூ சட்டை மாறன் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். அம்பேத்கரின் ஆளுமையின் அத்தனை பரிமாணங்களையும் பேசும் முழுமையான ஆளுமையின் நூல், ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’. இந்த நூலை விகடன் பிரசுரமும், வாய்ஸ் ஆப் காமன் நிறுவனமும் இணைந்து வெளியிட்ட இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா, சமீபத்தில் அம்பேத்கரின் நினைவு நாளன்று சென்னையில் நடைபெற்றது.

-விளம்பரம்-

மேலும், இந்த விழாவில் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் பா சீனிவாசன் வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியை தொடங்கினார். அதைத்தொடர்ந்து, ‘ எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தகத்தை ‘ வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட, சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே சந்துரு, அம்பேத்கரின் பேரனும், சமூகச் செயல்பாட்டாளர் ஆனந்த் டெம்டும்டேவும் இந்தப் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டனர். முதலில் விசிக தலைவர் திருமாவளவனும் இந்த நிகழ்ச்சியில்கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை.

- Advertisement -

விஜய் பேசியது:

பின், நிகழ்ச்சியில் பேசிய விஜய், ‘விசிக தலைவர் தொல் திருமாவளவனால் இன்று வர முடியாமல் போனது. அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவிற்குக் கூட அவரால் புத்தக கொள்ள முடியாத அளவிற்குக் கூட்டணிக் கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் இருக்கும் என என்னால் யூகிக்க முடிந்தாலும், நான் இப்போது சொல்கிறேன். அவரின் மனம் முழுக்க இன்று நம்மோடு தான் இருக்கும்.’ என்று பேசியிருந்தார். இதுபோல் விஜய் பேசியது திமுகவை தான் என்று தெள்ளத்தெளிவாக அனைவருக்கும் தெரிந்தது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

கொந்தளித்த ஆளூர் ஷாநவாஸ்:

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், கூட்டணி கட்சிகள் அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்க கூடிய அளவுக்கு நானும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பலவீனமாக இல்லை என்று கூறியிருந்தார். ஆனால், திருமாவளவனை விஜய் விமர்சித்ததால் விசிக கட்சியினர் கொந்தளித்து இருந்தார்கள். அதைத் தொடர்ந்து விவாத நிகழ்ச்சியில் பேசியிருந்த ஷாநவாஸ், ‘எங்கள் தலைவர் திருமாவளவன் அறிவார்ந்த தலைவர். நேத்து வந்த ‘கூத்தாடி’ அவரை எப்படி பேசலாம்’ என்று விஜய்யை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

-விளம்பரம்-

ப்ளூ சட்டை மாறன் பதிவு:

இந்நிலையில் தற்போது பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விஜய்க்கு ஆதரவாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சில தினங்களுக்கு முன் நடந்த விவாத நிகழ்ச்சியில் விஜய்யை கூத்தாடி என கோவமாக சாடினார் விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ்‌. விவாத நிகழ்ச்சிகளில் நாகரீகமாகவும், அமைதியாகவும் பேசும் மிகச்சிலரில் இவரும் ஒருவர். ஆனால் இம்முறை பொறுமை இழந்து இப்படியொரு வார்த்தையை பேசியுள்ளார். சினிமா நடிகர்களை கட்சியில் சேர்ப்பது, பிரச்சாரத்திற்கு அழைப்பது, வெற்றிக்காக வாய்ஸ் தர சொல்வது, கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் அருகே அமர வைப்பது, அவர்களின் படங்களை ப்ரிவியூ ஷோ பார்ப்பது.‌

‘கூத்தாடி’ இழிவான சொல்லா:

மேலும், அரசியல் மேடைகளில் நடிகர்களை போல உள்ளவர்களை ஆட வைப்பது.. என அனைத்திற்கும் அவர்களை ஏன் அழைக்கிறீர்கள்? உங்கள் தலைவர் கூட படங்களில் நடித்துள்ளார். ப்ரிவியூ ஷோ பார்த்து விமர்சனம் சொல்கிறார். தனது பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு திரையுலகினரை அழைத்து பேச சொல்கிறார். அப்போதெல்லாம் நடிகர்கள் மீது உங்களுக்கு கோவம் வரவில்லையா? கூத்தாடி எனும் வார்த்தை எப்படி உங்களைப்போன்ற சட்டம் படித்தோருக்கு கூட இழிவான சொல்லாக மாறியது? வேறு துறையை அல்லது சமூகத்தை சேர்ந்தோரை இப்படி பேசியிருந்தால்.. போராட்டம் வெடித்திருக்கும். நீங்களும் உடனே மன்னிப்பு கேட்டிருப்பீர்கள்.

வருத்தம் தெரிவிப்பீர்களா :

ஆனால் சினிமாக்கரர்களிடம் ஒற்றுமை இல்லாததால்.‌ இப்படி பேசியுள்ளீர்கள். இதை கண்டிக்க ஒரு நடிகருக்கும் திராணி இல்லை. அதில் ஆச்சர்யமும் இல்லை. நேற்றுநடந்த சினிமா நிகழ்ச்சியில் இயக்குனர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு ஆகியோர் மட்டும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். வரும் தேர்தலில் சினிமா சம்மந்தப்பட்ட எவரும் உங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிக்கு பிரச்சாரம் செய்ய வேண்டாம், எங்களுடன் மேடையேற வேண்டாம். இனி சினிமா சார்ந்த நிகழ்வுகளில் நாங்கள் பங்கேற்பதில்லை என உறுதியளிக்க இயலுமா? தங்கள் பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பீர்களா? என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement