உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ரஜினி ஆசீர்வாதம் வாங்கும் வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் ரஜினியின் இந்த செயலை கேலி செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். விமர்சகர் ப்ளூ சட்டை மாறனை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என்று யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார்.
குறள் 272:
— Blue Sattai Maran (@tamiltalkies) August 20, 2023
வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத் தானறி குற்றப் படின்.
விளக்கம்:
தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.
குறள் 275:
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென் றேதம் பலவுந் தரும்.… pic.twitter.com/BY9IPTvS94
நடிகர்கள் முதல் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் என யாரையும் விட்டுவைக்காமல் விமர்சித்து இருக்கிறார். மேலும், இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. ஆனால், இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர். இவர் விமர்சகர் என்று சொல்லிக்கொண்டு திரைப்படங்களை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார்.
இதனால் இவரை ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி இருக்கின்றன. அந்த வகையில் இவர் ரஜினியை அடிக்கடி வம்பிழுத்து வருகிறார். அதிலும் அண்ணத்த படத்தின் போது இவர் படத்தை மட்டுமல்லாது ரஜினியையும் படு மோசமாக விமர்சித்து இருந்தார். அப்போது இருந்து இவருக்கு ரஜினி ரசிகர்களுக்கும் ட்விட்டரில் அடிக்கடி கமண்ட் போர் சென்று கொண்டு தான் இருக்கிறது. இது இறுதியில் கொலை மிரட்டல் வரை சென்றது.
ஆனாலும், ரஜினியை இவர் விமர்சித்து வருவதை விட்ட பாடில்லை. இப்படி ஒரு நிலையில் ரஜினி உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்த வீடியோவை பகிர்ந்து கேலி செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.ஜெயிலர் திரைப்படம் வசூல் குவித்து வரும் நிலையில் படம் வெளியான உடனே ரஜினி அவர்கள் இமயமலைக்கு சென்று விட்டார். ங்கு அவர் ஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு சென்று இருக்கிறார்.
பின் ரஜினிகாந்த் அங்கு மாநில ஆளுநரை சந்தித்து பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து ஆசிரமத்திற்கு சென்று இருந்தார். ஆசிரமத்தில் குருவிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோ சென்றிருந்தார். இப்படி ஒரு நிலையில் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது மரியாதை நிமிர்த்தமாக அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.
உங்கள் புகழுக்கும், உயரத்திற்கும் இந்த சறுக்கல்கள் தேவையா ரஜினிகாந்த்?
— Blue Sattai Maran (@tamiltalkies) August 19, 2023
ஒவ்வொரு பிரபலத்திற்கும் இறுதிக்கால வரலாறு முக்கியம். இதை உணரவே மாட்டீர்கள் போல. pic.twitter.com/ERPIgwyt8H
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வர ரசிகர்கள் பலரும் பல விதமான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். இதனை விமர்சிக்கும் விதமாக ப்ளூ சட்டை மாறன் திருக்குறள் ஒன்றை பதிவிட்டு ரஜினியை கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும், ப்ளூ சட்டையின் இந்த பதிவை கண்ட ரஜினி ரசிகர்கள் சிலர், அஜித், கலைஞர் காலில் விழுந்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்தனர்.
இதற்கு பதில் அளித்த ப்ளூ சட்டை ‘அஜித்தை கூட்டிட்டு போனதே உங்க தலைவர்தானாம். ஆளுங்கட்சிக்கு எதிரா ஆயிரக்கணக்கான மக்கள் முன்னாடி முதல்வரை பாத்து தில்லா பேசுனாரே. அதெல்லாம் உங்க தலைவருக்கு வராது.ஸ்ட்ரைட்டா கால்ல விழுறாரு. கெளம்பு தம்பி’ என்று பதில் கூறியுள்ளார். அதே போல இன்னோரு ட்விட்டர் வாசி விஜய். மோடியை சந்தித்த போது எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த ப்ளூ சட்டை மாறன் ‘அதனால் என்ன ? கால்ல விழுந்தாரா?’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.