ஆடியோ லான்ச் வரமாட்டார், விழாக்களுக்கு வர மாட்டார், பேட்டி கொடுக்க மாட்டார். ஆனால், வருஷத்துக்கு 365 – அஜித்தை விமர்சித்த இயக்குனர்,

0
407
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக என்றென்றும் ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வெளிவரும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த விசுவாசம், நேர்கொண்டபார்வை ஆகிய இரண்டு படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் அவர்கள் இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து இருந்தார். ஆனால், இந்த படம் மாபெரும் தோல்வி அடைந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் அஜித் நடித்து வருகிறார். பொதுவாக பல ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் அஜித் பொது நிகழ்ச்சிகளிலும், திரைப்பட கலை நிகழ்ச்சியிலும் காண்பது என்பது மிகவும் அறிது. ஆனால், கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு ‘பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’ என்ற விழா அமைக்கப்பட்டு அதில் பல்வேறு திரைப்பட பிரபலங்கள் பங்கேற்றனர். இதில் அஜித்தின் பேச்சை கேட்டு அரங்கில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டினார்.

இதையும் பாருங்க : ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர்கள் மீது புகார் அளித்த சின்மயிக்கு வந்த ஆப்பு – புலம்பிய சின்மயி.

- Advertisement -

கடைசியாக கலந்துகொண்ட விழா :

மேலும், அஜித்தின் இந்த ஆதங்கமான பேச்சிக்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்தது. மேலும், நடிகர் அஜித் கலைஞர் வீட்டிற்கு சென்றிருந்த போது அஜித்தை தட்டி கொடுத்து அவரது தைரியத்தையும் பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அஜித் தனது படத்தின் ப்ரோமோஷனுக்கு கலந்துகொள்ளாததால் அடிக்கடி விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறார். அதே போல அஜித்தின் புகைப்படங்கள் கூட வெளியவாது அரிதான ஒரு விஷயம் தான்.

வெளிநாடு சென்ற அஜித் :

ஆனால், கடந்த சில வாரமாக அஜித்தின் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் தற்போது அஜித் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அங்கு பைக்கிலேயே பல இடங்களுக்கு சென்று வருகிறார். அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்போது அடிக்கடி வெளியாகி கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

தொடர்ந்து வெளியாகும் Akவின் படங்கள் :

அஜித் படத்தின் அப்டேட் தான் வரவில்லை அஜித்தின் புகைப்படமாவது அடிக்கடி வெளிவாவதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்து இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் அஜித் விளம்பரத்திற்காக தான் இதையெல்லம் செய்கிறார் என்று தமிழ் சினிமாவில் புதிதாக இயக்குனர் அவதாரம் எடுத்த ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து இருப்பது அஜித் ரசிகர்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

அஜித்தை விமர்சித்த ப்ளூ சட்டை :

சமீபத்தில் அஜித்தின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள மாறன் ‘இசை வெளியீட்டுக்கு வரமாட்டார், தன் படத்தை விளம்பரப்படுத்த மாட்டார், விழாக்களுக்கு வர மாட்டார், பேட்டி கொடுக்க மாட்டார். ஆனால், வருஷத்துக்கு 365 நாளும் அவருடைய போட்டோவை மட்டும் நாம் பார்க்க முடியும். ஏனென்றால் அஜித்திற்கு விளம்பரம் புடிக்காது. அவருக்கு தெரியாம, அனுமதி இல்லாமல் போட்டோ எடுத்து போட்ருறாங்க நம்புங்கண்ணே, நம்புங்க’ என்று பதிவிட்டுள்ளார்.

விஜய்க்கு எதிராக இப்படி நடக்கிறதா :

இது ஒருபுறம் இருக்க விஜய் பிறந்தநாளின் போது ப்ளூ சட்டை மாறன் விஜய் ரசிகர் போட்ட பதிவு ஒன்றை பகிர்ந்து இருந்தார். அதில் ‘கடந்த சில நாட்களாக அஜித்தின் புகைப்படங்கள் தான் அடிக்கடி வருகிறது. இதற்கு பின்னால் ஒரு பெரிய PR வேலை செய்து கொண்டு இருக்கிறது. ஏன் என்றால் விஜய் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் விஜய் பிறந்தநாள் வருவதால் தான்.’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவை ப்ளூ சட்டையும் பகிர்ந்து இருந்தார்.

Advertisement