ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர்கள் மீது புகார் அளித்த சின்மயிக்கு வந்த ஆப்பு – புலம்பிய சின்மயி.

0
235
Chinmayi
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் சின்மயி . இவர் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதனை தொடர்ந்து இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. இப்படி ஒரு நிலையில் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே ஒரு பணிப்போரே ஏற்பட்டது.

-விளம்பரம்-

அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது. இதனைத்தொடர்ந்து வைரமுத்து யாருடைய படங்களில் ஒப்பந்தம் ஆனாலும் ஏன் இந்த மாதிரி? ஆளுக்கெல்லாம் வாய்ப்பு தருகிறீர்கள். இவரை எல்லாம் படத்தில் வைக்காதீர்கள்? என்று சின்மையி விமர்சித்து டீவ்ட் போட்டு வருகிறார். மேலும், இந்தப் பிரச்சனையில் இருந்து சின்மயி பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.

- Advertisement -

சின்மயி வைரமுத்து விவகாரம் :

அதுமட்டுமில்லாமல் அடிமைத்தனம், பெண்கள் சுதந்திரம் போன்ற பெண்கள் தொடர்பான விஷயங்களுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் வைரமுத்து குறித்து தற்போதும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார் சின்மயி. மேலும், பெண்கள் குறித்து எந்த ஒரு செய்திகள் வந்தாலும் அதில் வைரமுத்துவை எடுத்துக்காட்டாக வைத்து வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

தொடர்ந்து வந்த ஆபாச மெசேஜ்கள் :

இப்படி இவர் தொடர்ந்து செய்து கொண்டு வருவதால் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் இவரை பலரும் திட்டி தீர்த்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இவருக்கு சமூக வலைத்தளத்தில் பல்வேறு ஆபாச மெசேஜ்களும் குவிந்து கொண்டு தான் வருகிறது. ஆனால், அதையும் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தார். இப்படி ஒரு நிலையில் தனக்கு தொடர்ந்து ஆபாசமாக குறுஞ்செய்திகள் அனுப்பும் நபர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை சின்மயி ரிப்போர்ட் செய்திருந்தார்.

-விளம்பரம்-

சின்மயி கணக்கு முடக்கம் :

ஆனால், இவரது கணக்கு இன்ஸ்டாகிராம் தற்போது முடக்கி இருக்கிறது. பாடகி சின்மயி தனது கணவர் ராகுல் ரவீந்திரன் மற்றும் தனக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளோடு புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதள பக்கமான இன்ஸ்டகிராம் கணக்கில் பதிவேற்றிய மறுநாள் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டு இருக்கிறது. அவரது டிஎம் பிளாக் செய்யப்பட்ட பிறகு சின்மயி இதனை பார்த்துள்ளார், பிறகு ஒரு பேக்கப் கணக்கை உருவாக்கி இருக்கிறார்.

சின்மயி காட்டம் :

அதில் பதிவிட்டுள்ள சின்மயி ‘இந்த சமூக ஊடக வணிகங்கள் வெளிப்படையாக, வித்தியாசமாக செயல்படுகின்றன மற்றும் கொள்கைகளின் பெயரில் ஆச்சரியமான நடவடிக்கைகளை எடுக்கின்றன” என்று எழுதியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “என்னுடைய டிஎம்களில் ஆபாச புகைப்படங்களை அனுப்பும் சில ஆண்களை நான் புகாரளிப்பதால் இன்ஸ்டாகிராம் எனது கணக்கை நீக்கியுள்ளது.  சிறிது காலமாகவே நான் புகாரளிக்கும்போது இப்படி நடந்து வருகிறது.  எப்படியிருந்தாலும், இதுதான் எனது பேக்கப் அக்கவுண்ட்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement