பொய் சொன்ன வடை வாயர்களே,வசமா மாட்டுனீங்க – ஜெயிலர் படத்தின் ஒரு வார வசூல் ரிப்போர்ட்டை கலாய்த்து ப்ளூ சட்டை போட்ட பதிவு.

0
1977
bluesattai
- Advertisement -

ரஜினியுடன் பேசிய வீடியோவை வெளியிட போவதாக கூறிய ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் பலர் ஏமாற்றமடைந்துள்ளார்கள். அண்ணத்த படத்தில் இருந்தே ரஜினி ரசிகர்களுக்கும் ப்ளூ சட்டைக்கும் ட்விட்டரில் பனிப்போர் சென்று கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் ஜெயிலர் படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினி ரசிகர்களை வம்பிழுத்து வருகிறார் ப்ளூ சட்டை. இப்படி ஒரு நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை கேலி செய்யும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

இதுகுறித்து பேசிய அவர் ‘ போலியான பாக்ஸ் ஆபீஸ் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. பொதுவாக அனைத்து தயாரிப்பு நிறுவனமும் உண்மையான வசூல் நிலவரத்தை சொல்வதில்லை. குறிப்பாக தமிழகத்தில் எந்தெந்த ஏரியா, வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் என்ன கலெக்சன் என்று புள்ளிவிவரத்துடன்  கூறியதில்லை. ரவுண்டாக ஒரு ஊத்தாப்பம் போடுவார்கள். 50, 75, 100 கோடிகள் என்று. அல்லது ஒரு சக்ஸஸ் (Sarcastic) மீட் வைத்து கொண்டாடுவார்கள்.

- Advertisement -

அதில் பெரும்பாலும் வசூல் தொகையை குறிப்பிடுவதில்லை. படம் சக்ஸஸ். நம்புங்க என்று சொல்வதோடு சரி. இதோ இப்போது ஒருவார கலெக்சன் 375.40 கோடி என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. Tentative. Still uploading என்று ஒரு சிறிய குழப்பத்துடன். இது ஒருவார வசூல் குறித்த Tentative. Still uploading ஆ அல்லது அடுத்த கட்ட வசூலுக்கான Tentative. Still uploading ஆ என்று தெளிவாக கூறியிருக்கலாம்.

சரி. இப்போதைக்கு இதுவே உண்மையான ரிப்போர்ட் என நினைத்து இதையே ஒருவார கலக்சனுக்கான அளவுகோலாக வைத்து கொள்வோம். இதன்படி ஒப்பிட்டால்… ஒரு வாரத்திற்குள் 400 கோடி, 450, 500, 600 கோடி என்று பலர் அள்ளி விட்டார்களே!!  அதெல்லாம் பச்சை பொய் என்று நிரூபிக்கப்பட்டு விட்டது என்பதுதானே உண்மை? Box Office Trackers, Social media Influencers, Youtube பேட்டி தந்த பெரியப்பாக்கள் இதுவரை சுட்டது எல்லாம் போலி வடைகள்தான் என்று ஓயாமல் சொல்லி வந்தேன்.

-விளம்பரம்-

அதற்கு ‘வன்மத்தை கக்குகிறான். வயித்தெரிச்சல்’ என இந்த கோஷ்டிகளில் பலர் சவுண்ட் விட்டார்கள். பருந்துக்குஞ்சுகள் உட்பட. இப்போது இவர்களின் முகத்திரை கிழிந்து தொங்கி விட்டது. இதற்கு முன்பு பல படங்களின் வசூலை இவர்கள் போலியாக அள்ளி விட்டார்கள் என்பதை இனியாவது நம்பவும். எனக்கு வந்த கமண்ட்களில் ‘இவர்கள் சொல்வது பொய்யென்றால்.. நீங்களாவது உண்மையான ரிப்போர்ட்டை சொல்லுங்கள்’ என பலர் கேட்டனர்.

அதற்கு நான் தந்த பதில் ஒன்றுதான். ‘இன்னும் கொஞ்சம் நாள் காத்திருப்போம்’ என்பது தான். அனைத்து போலி பாக்ஸ் ஆபீசர்களின் வண்டவாளங்களும் இன்றாவது தண்டவாளத்தில் ஏற்றப்பட்டதில் மகிழ்ச்சி. மீண்டும் கூறிக்கொள்வது. தயாரிப்பு தரப்பு கூறியுள்ள கலெக்சன் ஒரு ஒப்பீட்டிற்கான அளவுகோல் மட்டுமே. அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் உண்மையான வசூலை சொல்வதில்லை.

ரவுண்டாக ஒரு ஊத்தாப்ப போஸ்டர் மட்டுமே!! அப்படி ரவுண்டு கட்டாமல் ஒரு ரிப்போர்ட்டை சன் பிக்சர்ஸ் தந்திருப்பது சிறு ஆறுதல். கமலின் விக்ரம் வசூல் 420+ கோடியை  ஜெயிலர் ஒரே வாரத்திற்குள் தாண்டியது என்று பொய் சொன்ன வடை வாயர்களே.. வசமா மாட்டுனீங்க. இனி உங்க கலக்சன் ரிப்போர்ட் மக்களிடம் எடுபடாது’ என்று பதிவிட்டு மீண்டும் ரஜினி ரசிகர்களை சீண்டி இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

Advertisement