‘சந்தோசம், நிம்மதி இல்ல’ – ரஜினியின் உருக்கமான பேச்சை கேலி செய்து ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவு.

0
718
rajini
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

சமீபத்தில் வெளியான இரவின் நிழல் படத்தை கூட விமர்சித்து மாறன் தொடர்ந்து பதிவுகளை போட்டு வருகிறார். அதற்கு பார்த்திபனும் பதிலடி கொடுத்து இருந்தார். மேலும், இவர் அண்ணாத்த படம் வெளியான போதே அந்த படத்தை தாறு மாறாக விமர்சித்து பேசி இருந்தார். இதனால் ரஜினி ரசிகர்களும் இவரை திட்டி தீர்த்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் மீண்டும் ரஜினியை சீண்டி இருக்கிறார் மாறன்.

- Advertisement -

கிரியா யோகா நிகழ்ச்சி:

சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற கிரியா யோகா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். பின்னர் அவர் தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க நூலை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கூறியது, யோகா நிகழ்ச்சிக்கு இவ்வளவு பெரிய கூட்டம் வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை. எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்தது ராகவேந்திரா, பாபா படங்கள் தான். இந்த இரு படங்கள் வந்த பின்னர் தான் அனைவருக்கும் இவர்கள் இருவரையும் தெரிய வந்தது. எனக்கு மிகவும் சந்தோஷமான விஷயம். என் ரசிகர்கள் இருவர் சன்னியாசியாக மாறியுள்ளனர்.

நிகழ்ச்சியில் ரஜினி சொன்னது:

ஆனால், நான் இன்னும் நடிகராக இருக்கிறேன். இமயமலை இயற்கையாகவே அமைந்துள்ள குகைகள் சொர்க்கம் போல் காட்சியளிக்கும். குகைகளில் சில மூலிகைகள் கிடைக்கும். அதனை சாப்பிட்டால் ஒரு வாரத்திற்கான புத்துணர்ச்சி அதிகமாக கிடைக்கும். கங்கை நதி ஏன் புனிதம் என்றால், மூலிகைகள் எல்லாம் அதில் கலக்கும். அதுமட்டுமில்லாமல் அங்கே உள்ள சித்தர்கள் குளிப்பதால் அந்த நதி பவித்ரமாக இருக்கும். உடல்நிலையை பாதுக்காக்க வேண்டும். உணவு சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். சிறுவயதில் உடல் ஆரோக்கியத்தை பாதுக்காப்பை விட வயது முதிர்ந்த பின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

-விளம்பரம்-

உடல் ஆரோக்கியம் குறித்து ரஜினி கூறியது:

ஏனென்றால், சொத்துகளை விட்டுச் செல்வதை விட நோயாளியாக இருந்திடக் கூடாது. இது அனைவருக்கும் துன்பம். அதேபோல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு நல்ல உபதேசங்கள் தான். பெற்றோர், ஆசிரியர்கள் சொல்வதை கேட்க வேண்டும். நல்ல சிந்தனைகளுக்காக புத்தகங்களை வாசிக்க வேண்டும். மனிதர்கள் கடந்த காலங்களையும், எதிர்காலத்தையும் நினைத்து கவலைக் கொள்வர். ஆனால், குழந்தைகள் அப்படியல்ல. வலிகளில் இருந்து வெளிவர நிகழ் காலத்தில் சிந்தனையை வைக்க வேண்டும்.

ரஜினியை கேலி செய்த மாறன் :

வாழ்க்கையில் பணம், பேர், புகழ் எல்லாவற்றையும் கடந்து நிம்மதியாக இருக்க வேண்டும். என் வாழ்க்கையில் நான் அனைத்து உச்சங்களையும் தொட்டுவிட்டேன். ஆனால், சித்தர்களிடம் உள்ள நிம்மதி, சந்தோஷம் 10 சதவீதம் கூட இதுவரை எனக்கு கிடைக்கவில்லை என்று கூறி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் ரஜினியின் இந்த பேச்சை கேலி செய்துள்ள மாறன் ‘உங்க படத்துல வர்ற மாதிரி எல்லா சொத்தையும் ஏழைகளுக்கு எழுதி வச்சிட்டு… இமயமலையில் நிம்மதியை தேடலாமே ஜி.’ என்று கேலி செய்து இருக்கிறார்.

Advertisement