வழக்கமா சனிக்கிழமை தானே அடிப்பீங்க, ஆனா எங்கள- ‘சூர்யாவின் சாட்டர்டே’ படத்தை வச்சு செஞ்ச ப்ளூ சட்டை மாறன்

0
237
- Advertisement -

பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ‘சூர்யாவின் சாட்டர்டே’ திரைப்படத்தை வறுத்தெடுத்து இருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் பிரபலமான நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ‘சூர்யாவின் சாட்டர்டே’. இப்படத்தில் நானியுடன் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். அதே போல் இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா வில்லனாக களமிறங்கியுள்ளார்.

-விளம்பரம்-

படத்தில் ஹீரோ நானி தனது சிறு வயதிலிருந்து மிகவும் கோப சுபாவம் கொண்டவர். எங்கே போனாலும் அடிதடி என்று இருக்கிறார். தனது மகனைக் குறித்து வருத்தப்படும் நானியின் தாய், தான் இறக்கும் தருவாயில் வாரத்திற்கு ஒரு நாள் மட்டும், உன் கோபத்தை காட்டு என சத்தியம் வாங்கிக்கொண்டு இறந்து போகிறார். அதனால், வாரத்தில் ஆறு நாட்கள் தான் பார்க்கும் தவறுகளை எழுதி வைத்துக்கொண்டு, சனிக்கிழமை மட்டும் சென்று அவர்களை நானி அடிக்கிறார். இதுபோல் செல்லும் நானியின் வாழ்க்கையில், கதாநாயகி பிரியங்கா மோகனின் நட்பு கிடைக்கிறது.

- Advertisement -

கதைக்களம்:

மேலும், பிரியங்கா மோகன் போலீசாக இருக்கும் அதே ஸ்டேஷனில் எஸ்.ஜே. சூர்யாவும் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். இவர் தனக்கு கோபம் வரும்போது எல்லாம் தனது கண்ட்ரோலில் இருக்கும் சோகுல பாலம் ஊர் மக்களை கொடூரமாக அடித்து தனது கோபத்தை தணித்துக் கொள்கிறார். இந்நிலையில், நானிக்கு பிரியங்கா மோகன் மூலம் சோகுல பாலம் ஊர் மக்களிடம் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. அதற்குப் பிறகு அந்த மக்களுக்காக எஸ்.ஜே.சூர்யாவிடம் நானி மல்லு கட்டுவது தான் மீதி கதை.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்:

‌இந்நிலையில் பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை விமர்சித்துள்ளார். அதில் அவர், இந்த கதை தெலுங்கு சினிமாக்கு ஏத்த முரட்டு மசாலா கதை. இதை திரைக்கதையாக சுவாரஸ்யப்படுத்த கோட்டை விட்டுவிட்டார்கள். குறிப்பாக ஹீரோ சனிக்கிழமைகளில் மட்டும் ஏன் அடிக்கிறார் என்பதை சொல்லவே அரை மணி நேரம் வீணடித்து விட்டார்கள். அதேபோல் ஹீரோ, ஹீரோயினுக்கு ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது. அதை காட்டாமல் புதுசாக ஒரு காதல் கதையை கொண்டு வந்து காட்டியிருக்கிறார்கள். அதனால் அந்த ஃப்ளாஷ் பேக் வீணாகப் போய்விட்டது.

-விளம்பரம்-

எஸ்.ஜே.சூர்யா என்ட்ரி:

அதேபோல், எஸ்.ஜே. சூர்யா வந்த பின்னர் தான் படம் பிக்கப் ஆக ஆரம்பிக்கிறது. ஆனால், அவர் கோபம் வரும் போதெல்லாம் ஊர் மக்களை அடிப்பது கொஞ்சம் கூட லாஜிக்காக இல்லை. அதேபோல், படத்தில் அஜய் கோஸ் வில்லனாக வந்து ஹீரோ கிட்ட அடி வாங்கிக் கொண்டு போறது தான் வேலையாக வைத்திருக்கிறார். அதேபோல், தெலுங்கு சினிமா என்றால் குத்துப்பாட்டு, லவ் சீன் என்று கலர்ஃபுல்லாக இருக்கும். இந்த படத்தில் அதற்கும் வாய்ப்பு இல்லை. ஆனால், படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் முரளி சர்மா இடையே வரும் காட்சிகள் சுவாரசியமாக இருக்கிறது. கடைசியில் படம் எஸ்.ஜே. சூர்யா கையில் போனதால் கொஞ்சம் ரசிக்கும் படி இருக்கிறது.

ஊமைக்குத்தாக குத்திவிட்டார்:

மொத்தத்துல இந்த படம் எப்படி இருக்குன்னு சொல்லணும்னா, தெலுங்கு படத்துக்கு ஏத்த நல்ல மசாலா முரட்டு கதை தான். இந்த மசாலா கதையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து கொடுத்திருக்கலாம். ஆனால், அதை கோட்டை விட்டுவிட்டார்கள். கதைப்படி ஹீரோ, தனது கோபத்தை சனிக்கிழமைகளில் காட்டுவார். ஆனா, இந்த படம் வியாழக்கிழமையே ரிலீஸ் ஆனதால நம்ம படத்தை பார்க்க போனோம். நம்ம மேல என்ன கோபம் என்று தெரியவில்லை சனிக்கிழமை காட்ட வேண்டிய கோபத்தை வியாழக்கிழமையே காட்டி ஊமைக்குத்தாக குத்திவிட்டார் என்று விமர்சித்துள்ளார்.

Advertisement