மீண்டும் தோல்வியடைந்த பாபா, ரஜினி மகிழ்ச்சியாக இருக்கிறாம் – அதற்கு காரணம் ஜோசியர் சொன்ன இந்த விஷயம் தானாம்.

0
618
baba
- Advertisement -

கடந்த 2002ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்திருந்த பாபா திரைப்படம் வெளியாகி முதல் நாளிலேயே பெரும் தோல்வியை தழுவியது. இந்த படம் ரஜினிகாந்துடைய வாழ்க்கையிலேயே மிகப்பெரிய தோல்வி படம் என்று அப்போது செய்தி ஊடகங்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் பாபா படத்தை ரஜினிகாந்த ரசிகர்கள் வெற்றிடமாகத்தான் கொண்டாடினார்கள். அதோடு இப்படத்தில் ரஜினிகாந்த அரசியலுக்கு வருவதை போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தால் அவருடைய ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த மீண்டும் அரசியலுக்கு வருவார் என கூறப்பட்டது.

-விளம்பரம்-
baba

பாபா ரீ ரிலீஸ் :

அதனை தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கூட அரசியலில் கட்சி தொடங்க போவதாகவும் கூறியிருந்தார் ஆனால் அதற்கு பிறகு ரஜினிகாந்திருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் தான் இனி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள். இந்நிலையில் ரஜினிகாந்த தன்னுடைய பிறந்தநாளையொட்டி பாபா ரீ ரிலீஸ் செய்ய போவதாக கூறியிருந்தார் அது பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகி இவர் மீண்டும் இந்த படத்தின் மூலம் அரசியலுக்கு வருவேன் என்கிறாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

- Advertisement -

மற்றம் செய்யப்பட்ட காட்சிகள் :

ஆனால் தற்போது ரீ ரிலீஸ் ஆகிய பாபா படத்தில் அரசியல் சம்மந்தப்பட்ட காட்சிகளை படக்குழு நீக்கியும் கிளைமாக்ஸ் காட்சியில் மாறுதல் செய்தும் படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் ரஜினிகாந்த தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று இப்படத்தின் மூலம் உறுதியாக கூறியிருந்தார். இந்நிலையில் மாற்றங்கள் செய்யப்பட்டு கடந்த 10 தேதி வெளியிடப்பட்ட பாபா படம் இப்போது வெளியான பிறகு கூட “பாபா” படம் அந்த அளவிற்கு வெற்றியை தரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் படங்களை விமர்ச்சிக்கும் பிரபல யூடுபரான ப்ளூ சட்டை மாறன் பாபா படத்தை விமரிசிக்கும் வகையில் பதிவு ஒன்றை தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் :

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் ஹீரோக்களான யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். மேலும் இவர் தொடர்ந்து ரஜினியை அடிக்கடி கிண்டலடித்து வருகிறார். ரஜினியின் படங்களை மட்டும் அல்லாமல் அவரது தனிப்பட்ட செயல்பாடுகளை கூட கேலி செய்து வருகிறார் மாறன்.

-விளம்பரம்-

ட்விட்டர் பதிவு :

பாபா படம் ரீ ரிலீஸ் என்ற பேச்சு தொடங்கியதில் இருந்தே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மீது பல விமர்சங்களை கூறி வருகிறார் ப்ளூ சட்டை மாறன். இந்நிலையில் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிந்துள்ளார். அதில் பெயர் எதையும் குறிப்பிடாமல் `உச்ச நடிகர் ஏற்கெனவே நடித்து தோல்வியடைந்த ஒரு படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் ஆனது. ஆனால் அதிலும் பெரிய வெற்றியோ, வசூலோ இல்லை என்று சிலர் உச்ச நடிகரிடம் சொல்ல, அவருக்கு மகிழ்ச்சி பொறுக்க வில்லையாம். பணம் செலவழித்து வெளியிட்ட திரைப்படம் சரியாக போகவில்லை என்று கூற மகிழ்ச்சியடைந்த ரஜினியை அவர்கள் விமர்ச்சித்தார்களாம்.

jailer

இதற்காகத்தான் ரீ ரிலீஸ் :

இந்த நிலையில் உச்ச நடிகர் படம் தோல்வியடைந்ததற்கு காரணம் தெரியவந்துள்ளது. அதாவது உச்ச நடிகர் அடுத்த வெளியாகும் படம் சரியாகப் போகாது’ என்று ஜாதகத்தில் சொல்லவே. அதைக் கேட்டு இடிந்துபோன உச்ச நடிகர், ஜாதகத்தையே ஏமாற்றச் செய்த ஏற்பாடுதான் இந்த ரீ ரிலீஸ். எனவே இப்போது ஜாதகம் அடுத்த படம் இதுதான் என்று ஏமாந்துபோயிருக்கும் இதனால் அடுத்த படம் சரியாக ஓடும் என்ற எண்ணத்தில்தான் ரீ ரிலீஸ் செய்துள்ளார் உச்ச நடிகர் என ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

பெயர் எதையும் குறிப்பிடாமல் ப்ளூ சட்டை மாறன் போட்டிருக்கும் இந்த பதிவி மைறைமுகமாக் ரஜினியை குறிப்பிடுபவதாக ரஜினியின் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை விமரிசித்து வருகின்றனர்.

Advertisement