சென்னையில் மட்டுமல்ல திருப்பூரில் விஜய் ரசிகர்கள் செய்த அட்டூழியங்கள் – டேய் 90ஸ்,2k பூமர்ஸ் என்று ப்ளூ சட்டை மாறன் சரமாரி விமர்சனம்.

0
1175
BlueSattai
- Advertisement -

லியோ படத்திற்கு மேலும் மேலும் சிக்கல்கள் வந்த வண்ணமே தான் இருக்கிறது. தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்துள்ளனர். இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.இது ஒரு பக்கம் இருக்க, விஜய் படம் என்றாலே பலரும் எதிர்பார்ப்பது அவருடைய இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை தான்.

-விளம்பரம்-

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி லியோ படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும், இசை வெளியீட்டு விழாவிற்கான பாஸ்கள் கூட தயாராகி இருந்தது.இப்படி ஒரு நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. எப்போதும் பெரிய நடிகர்களின் டிரைலர் வெளியானால் அது ரோகிணி திரையரங்கத்தின்பார்க்கிங் ஸ்கிரீன் செய்யப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும். அந்த வகையில் லியோ பட ட்ரைலரை திரையிட இருப்பதால் திரையரங்கின் வாகனங்களை நிறுத்துமிடத்தில் காட்சியளிக்க கோயம்பேடு உதவி ஆணையரிடம் அனுமதி கூறியிருந்தனர்.

அதற்கு அவர்கள் இது போன்ற நிகழ்ச்சி நடத்தினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்று அனுமதிக்க முடியாது என்றும் அவர் கோரிக்கையை மறுத்துள்ளார். வேண்டுமென்றால் சென்னை காவல் ஆணையம் அலுவலகத்தில் இதனை கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்து அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார். இதனை தொடர்ந்து போலீசார் அனுமதி பெற்று ட்ரைலர் திரையிடப்பட்டது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் ட்ரைலர் திரையிட்ட பின்னர் விஜய் ரசிகர்கள் பலர் திரையரங்கின் இருக்கைகளை அடித்து நொறுக்கி உள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இதுகுறித்து பதிவிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன் ”படத்தை படமா பாப்போம். அதுல கஞ்சா அடிச்சா நாங்களும் கஞ்சா அடிக்க மாட்டோம். அதுல கொலை பண்ணா நாங்ளும் பண்ண மாட்டோம்’ – 90s and 2K Boomers.

ரெண்டரை நிமிச ட்ரைலரையே அமைதியா பாக்க தெரியாத.உங்களோட இந்த ஒழுக்க கேடை, சினிமா வெறியை, எல்லை மீறி ஹீரோக்களுக்கு காவடி தூக்கற காமடியை.. பாத்து மொத்த தமிழர்களும், இதர மாநில மக்களும் சிரிப்பா சிரிக்கறாங்க. இதுல ரெண்டரை மணிநேர படம் பாத்துட்டு.. கெட்டுப்போகாம.. ஒழுங்கா இருப்பாங்களாம். செம காமடிடா!! இப்படி பெரிய பொருட்சேதம் உண்டாக்குற அளவுக்கு சினிமா பைத்தியம் முத்திப்போன உங்களுக்கு.. வீட்லயும், ஸ்கூல், காலேஜ், வேலை செய்ற எடத்துல.. ஒருத்தரும் புத்தி சொல்ல மாட்டாங்களா? எல்லாரும் சொல்லியும் மண்டைல ஏறலையா?

Advertisement