75 கோடி வசூலித்ததாக அறிவித்த மாவீரன் படக்குழு – OVOP என்று கெட்ட வார்த்தையை சுருக்கமாக பதிவிட்ட ப்ளூ சட்டை.

0
1990
Maveeran
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும், கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து இருக்கிறார். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

ஆனால், இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து தான் வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். மேலும், தன்னைத்தானே விமர்சகர் என்று சொல்லிக்கொண்டு திரைப்படங்களை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார். படத்தில் இருக்கும் நிறைகளை பேசுவதைவிட குறைகளை பேசுவது தான் அதிகம். இதனால் இவரை ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி இருக்கின்றன.

- Advertisement -

skவின் மாவீரன் :

ஆனால், உண்மையில் ஒரு சில சமயத்தில் நல்ல படங்களுக்கு நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் மாபெரும் தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து ‘மாவீரன்’ படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தை மாடோன் அஸ்வின் இயக்கி இருந்தார்.

ப்ளூ சட்டை விமர்சனம் :

மடோன் அஸ்வின் ஏற்கனவே யோகி பாபுவை வைத்து ‘மாண்டேலா’ படத்தை இயக்கி இருந்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கிய மாவீரன் படமும் சிவகார்த்திகேயனை தோல்வி நாயகன் பிம்பத்தில் இருந்து காப்பாற்றியது. இருப்பினும் இந்த படம் ஒரு தரப்பு ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை. அந்த தரப்பில் ப்ளூ சட்டை மாறனும் ஒருவர். இந்த படத்திற்க்கு ப்ளூ சட்டை மிகவும் சுமாரான விமர்சனத்தை தான் கொடுத்து இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படம் தற்போது வரை 75 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருந்தது. இதனை கேலி செய்யும் விதமாக ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் ” என்று பதிவிட்டுள்ளார். ஆனால், அவர் பதிவிட்டது என்னவென்று புரியாமல் பலர் குழம்பி இருக்க நெட்டிசன்கள் பலர் அது கெட்ட வார்த்தை என்று பதிவிட்டு வருகின்றனர்.

திட்டி தீர்க்கும் Sk ரசிகர்கள் :

இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலரும் ப்ளூ சட்டை மாறனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே மாவீரன் திரைப்படம் கொரியன் படத்தின் காபி என்று ப்ளூ சட்டை பதிவிட்டு இருந்தார். அதே போல இந்த படம் வெளியாகும் முன்னர் இந்த படம் குறித்து பதிவிட்ட ப்ளூ சட்டை மாறன் ‘மாவீரன் இம்மாதம் 14 அன்று வெளியாகும் நிலையில்… 12 ஆம் தேதி டாம் க்ரூஸ் நடித்த Mission Impossible வெளியாகிறது. முதல் நாளுக்கான IMAX முன்பதிவு நிரம்பி வருகிறது.

‘குறுக்க இந்த கௌஷிக் வந்தா?’ மொமன்ட் என்று சிங்கம் புலி காமெடியின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதற்கு பதிலளித்த படத்தின் தயாரிப்பாளர் அருண் விச்வா போட்டிருந்த பதிவில் “வணக்கம் சார், இமை அருண் விஸ்வா, மாவீரன் படத்தோட தயாரிப்பாளர்! எனக்கு என் படம் தான் எனக்கு அவதார், ஆர்ஆர்ஆர், மிஷன் இம்பாஸிபில் எல்லாமே. இந்த வயசுக்கு இந்த பிக் ஷேர் செய்திருக்க வேண்டாம் சார் என்று பதிலளித்து இருந்தார்.

Advertisement