சொந்தமாக விமானம் வாங்கி வைத்திருக்கும் இந்திய நடிகர்கள், யார் யார் தெரியுமா? முழு லிஸ்ட்

0
901
private
- Advertisement -

சொந்தமாக விமானம் வைத்திருக்கும் நடிகர்களின் பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சினிமா என்பது மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது. சினிமா என்பது ஒரு மொழி மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள மொழிகளில் ஒளிபரப்பப்படும் பொழுதுபோக்கு அம்சம். அதேபோல் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான நபர்களாக திகழ்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மேலும், சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பலரும் கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள்.

-விளம்பரம்-

இப்படி கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் எங்கு சென்றாலும் விமானத்தில் செல்வதை தான் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இப்படி பல சினிமா நட்சத்திரங்கள் விமானத்தில் செல்வதற்கு ஏர்போர்ட்டுக்கு வரும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருவதை அனைவரும் பார்த்திருப்போம். மேலும், சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தில் மிகப் பெரிய வீடு, சொகுசு வாகனங்கள் என்று ஆடம்பர வாழ்க்கையில் வாழ்கிறார்கள். இப்படி சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை செலவழிக்கும் விஷயங்களைப் பட்டியலிட்டு ஒரு பெரிய லிஸ்டே போடலாம்.

- Advertisement -

அந்த அளவிற்கு சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் சம்பளம் வாங்குகிறார்கள். இந்த நிலையில் சில நடிகர்கள் வெளியில் செல்வதற்கு சொந்தமாக சொகுசு விமானங்களையும் வாங்கி வைத்திருக்கிறார்கள். இதை பெருமையாக கருதும் நடிகர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவில் சொந்த விமானம் வைத்திருக்கும் நடிகர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில்,

அக்ஷய்குமார்:

பாலிவுட்டின் பிரபல சீனியர் நடிகராக திகழ்பவர் அக்சய் குமார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அதிலும் இவர் அதிகம் ரீமேக் படங்களில் தான் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

சல்மான்கான்:

பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் சல்மான் கான். இவர் 1988 ஆம் ஆண்டு தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து கலக்கியிருக்கிறார். மேலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சல்மான் கான் இந்தி திரையுலகில் ஹீரோவாக வலம் வந்து கொண்டு வருகிறார்.

ஷில்பா ஷெட்டி:

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷில்பா செட்டி. இவர் தன்னுடைய பதினாறு வயதில் மாடலிங் மூலமாக தனது கேரியரை தொடங்கினார். அதன் பின் இவர் சினிமாவில் களமிறங்கினார். இவர் இந்தியில் உள்ள பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதோடு இவர் தமிழில் கூட சில படங்களில் நடித்து இருக்கிறார்.

ஷாருக்கான்:

பாலிவுட் சினிமா துறையின் முடி சூடா மன்னனாக திகழ்ந்து வருகிறார் ஷாருக்கான் . பல வருடமாக இவர் ஹிந்தி மொழி படங்களில் நடித்து இருக்கிறார். இருந்தாலும் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள்.

அமிதாப் பச்சன் குடும்பம்:

இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் அமிதாபச்சன். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அதோடு இவர் இன்றும் என்றும் இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆகவே திகழ்பவர் என்று சொல்லலாம். இந்திய திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராக கருதப்பட்டார். இவருடைய நடிப்பு திறமைக்கு தேசிய விருது, பிலிம்பேர் என பல விருதுகளை வாங்கினார்.

அஜய்தேவ் கான்:

பாலிவுட்டில் பிரபல நடிகர் அஜய் தேவ்கான். இவர் நடிகை கஜோலின் கணவர் ஆவார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

பிரியங்கா சோப்ரா:

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் இந்திய நடிகை மட்டுமில்லாமல் முன்னாள் உலக அழகியும் ஆவார். இவர் மாடலாக தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதன் பின் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். மேலும், இவர்களுடன் அணில் கபூர், ரித்திக் ரோஷன், மாதுரி தீக்ஷித் ஆகியோரும் அடங்கும்.

Advertisement