44 வயதில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள புதிய கீதை பட நடிகை – வைரலாகும் புகைப்படங்கள்.

0
1230
ameesha

தென்னிந்திய சினிமாவை விட பாலிவுட் சினிமாவில் நடிகைகளின் கவர்ச்சிக்கு அளவே இல்லாமல் தான் இருக்கும். இளம் நடிகை துவங்கி 40 வயது நடிகை வரை பலரும் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகை அமீஷா பட்டேலின் படு கவர்ச்சியான புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. நடிகை அமீஷா படேல் இந்தியில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தமிழ் ரசிகர்களுக்கு சொல்ல வேண்டும் என்றால், தமிழில் 2003 இல் வெளியான இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை என்ற படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடித்திருப்பனர்.

அதில் ஒருவர் நம் அனைவருக்கும் பரிச்சயமான நடிகை மீரா ஜாஸ்மின் , மற்றொருவர் பிரபல பாலிவுட் நடிகை அமிஷா படேல்.1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி மும்பையில் பிறந்த இவர் தனது 5 வயதிலேயே பரத நாட்டிய கலையை கற்றுவந்தார்.தனது பள்ளி படிப்பை முடித்தவுடன் தனது தந்தையின் பள்ளி பருவ நண்பர் ஒருவர் மூலமாக கிடைத்த வாய்ப்பின் மூலம் 2000 வெளியான கஹோனா பியார் ஹாய் என்ற படத்தில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

- Advertisement -

ஆனால் தனது கல்லூரி படிப்பிற்காக அமெரிக்க செல்ல விரும்பியதால் அந்த படத்தில் நடிக்க மறுத்தவிட்டார். அதன் பின்னர் அந்த வாய்ப்பு பாலிவுட் நடிகை கரீனாவிற்கு வர அவரும் அந்த படத்தில் இருந்து பாதியிலேயே விலகி விட்டார். இதனால் அந்த வாய்ப்பு அமிஷா படேலுக்கு மீண்டும் கிடைத்தது.அதன் பின்னர் இந்தியில் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். தற்போது 43 வயதாகவும் அமிஷா படேல் ஹ்ரித்திக் ரோஷன் தொடங்கி இன்று வரை உள்ள பல முன்னணி ஹீரோகளுடனும் நடித்து விட்டார்.

இந்த 2018 ஆண்டும் ஹிந்தியில் தேசி மேஜிக், பையாஜி சூப்பர் ஹிட் என்ற இரு படங்களில் நடித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகை அமீஷா, நீச்சல் உடையில் போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் கூட நடிகை அமீஷா, தயாரிப்பாளர் அஜய்குமார் சிங் என்பவரிடம் 2.5 கோடி ரூபாய் பணத்திற்காக செக் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement