இவர் சூப்பர் ஸ்டார் இல்லை இரண்டாம் நிலை நடிகர்..!2.0 வசூலை கிண்டல் செய்யும் பாலிவுட்..!

0
271
2.0

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் தயாரான 2.0 திரைப்படம் நேற்று(நவம்பர் 29)வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ள இந்த இந்திய சினிமாவின் அடுத்த கட்ட படம் என்று போற்றப்பட்டு வருகிறது.

ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷேய் குமார், ரியாஸ் கான், கைஸாட் கோட்வால்,மயூர் பனிஸ்வால் போன்ற பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். 545 ரூபாய் கோடி செலவில் உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் நாள் வசூல் சென்னையில் பெரும் சாதனையை செய்திருந்தது.

ஆனால் இந்தியில் நேற்று காலை காட்சிக்கு இந்த படத்திற்கு 40 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. காலை காட்சிகளை பொருத்த வரை தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்(65%), பாகி 2(57.5%), சஞ்சு(55%), கோல்டு(52.5%), ரேஸ் 3(50%), சத்யமேவ ஜெயதே(45%), பத்மாவத்(42.5%) ஆகிய படங்களுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது 2.0.

இந்நிலையில் பாலிவுட்டின் பிரபல விமர்சகரான கேஆர்கே தனது ட்விட்டர் பக்கத்தில், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் கூட முதல் நாள் வசூலில் 30 கோடி பெற்று விடுகின்றனர். ஆனால், 600 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள 2.0 திரைப்படம் 20 கோடி தான் வசூல் செய்துள்ளது. என்வே, அவர் சூப்பர் ஸ்டார் இல்லை பி கிரேடு நடிகர் தான் என்று பதிவிட்டுள்ளார். இதில் அவர் சூப்பர் ஸ்டாரை குறிப்பிடுகிறாரா அல்லது அக்ஷேய் குமாரை குறிப்பிடுகிறாரா என்று ராசிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.