தென்னிந்திய சினிமா திரை உலகில் மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். சமீபகாலமாகவே இவருடைய படங்கள் எல்லாம் தெறிக்க விடும் அளவிற்கு பட்டையை கிளப்புகிறது என்று சொல்லலாம். இந்நிலையில் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த ப்ளாக் பஸ்டர் படங்களான தெறி,மெர்சல் போன்ற படங்களை தொடர்ந்து தற்போது பிகில் படத்தில் மூன்றாவது முறையாக அட்லீயும், விஜய்யும் இணைந்துள்ளார்கள். மேலும், பிகில் படம் இந்த வருட தீபாவளிக்கு சரவெடி போட்டு தூள் கிளப்பியது.
பிகில் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 25 ஆம் தேதி வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக வேற லெவல்ல போய்க் கொண்டிருக்கின்றது. இதனை தொடர்ந்து பிகில் படம் வெளியாகி நான்கு நாட்களில் 150 கோடிக்கும் மேலாக வசூல் செய்துள்ளதகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது விஜய்யின் இதுவரை வந்த முந்தைய படங்களின் வசூலையும் மிஞ்சி அபார வெற்றி எனப்படுகிறது. இப்படி போய்க்கொண்டிருக்கும் நிலையில் இன்று காலை சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் அழைத்த போன் காலில் நடிகர் விஜய்யின் வீட்டில் சற்று நேரத்தில் குண்டு வெடிக்கப் போவது என கூறிவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டார்.
இதனால் போலீசார்கள் கொஞ்சம் அதிர்ச்சிக்குள்ளானர்கள். மேலும், விஜய்க்கு சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களையும் உஷார் செய்தார்கள்.ஏனெனில் , சமீப காலமாகவே விஜய்யின் அனைத்து படங்களிலும் அரசியல் சம்பந்தமான காட்சிகளும், அரசியல்வாதிகளை தாக்கும் விதமான கருத்துக்களும் இருந்து வருகின்றன. இதனை தொடர்ந்து வெளிவரும் அவருடைய படத்திற்கெல்லாம் திரையரங்கில் பல எதிர்பார்ப்புகளும் போராட்டங்களும் நடந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதிலும் பிகில் படம் குறித்து பல பிரச்சனைகளும் போராட்டங்களும் நடந்தன.
இந்நிலையில் விஜய் அவர்கள் பிகில் படம் இசை வெளியீட்டு விழாவின் போது கூறிய வார்த்தை மக்களிடையே பயங்கரமாக வைரல் ஆனது. மேலும் அனைத்தையும் அடித்து நொறுக்கி பிகில் படம் திரையரங்குகளில் வெளியானது. இவரின் வெற்றியை பொறுக்காமல் தான் இப்படி செய்தார்கள் என்ற தகவலும் வெளிவருகிறது. சென்னையில் உள்ள நீலாங்கரை மற்றும் சாலிகிராமத்தில் உள்ள விஜயின் வீடு, வடபழனியில் உள்ள ஷோபா திருமண மண்டபம் ஆகிய இடங்களில் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினார்கள். ஆனால், போலீசார் சோதனை நடத்திய பிறகு அந்த மர்ம நபர் கூறியபடி எந்த ஒரு வெடிகுண்டு வைக்கவில்லை என்றும் தெரிவித்தார்கள்.
விஜயை பிடிக்காதவர்கள் தான் இந்த மாதிரி வதந்தியை கிளப்பி வருகிறார்கள் என்ற தகவலும் போலீசார் விசாரணையில் தெரிவித்தார்கள். அதோடு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அந்த அலைபேசி எண்ணை விசாரித்து அந்த மர்ம நபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும்,வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபர் ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த வாலிபர் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்தால் அவரின் நோக்கம் என தெரிந்துவிடும் என போலீசார் கூறி வருகின்றனர். இதோடு விஜய் வீடு இருக்கும் பகுதிகளில் எல்லாம் இந்த வெடிகுண்டு வதந்தியால் பயங்கர பரபரப்பு ஏற்பட்டது கூட சொல்லலாம். மேலும், இந்த மாதிரி பொய்யான வதந்தியை கிளப்பியதற்கு அரசியல்வாதியாக இருக்கும? இல்ல தனிப்பட்ட பகையாக இருக்குமோ? என பல கேள்விகள் இணையங்களில் எழுந்து வருகின்றன.