இரவோடு இரவாக நடிகர் விஜய் வீட்டில் நடந்த திடீர் சோதனை – பின்னணி என்ன?

0
243
vijay
- Advertisement -

தளபதி விஜயின் வீட்டில் நள்ளிரவில் நடத்திய திடீர் சோதனை குறித்த தகவல் சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டின் திடீர் சோதனை நடத்தப்பட்டது குறித்த தகவல் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. நடிகர் சென்னை அவர்கள் நீலாங்கரையில் உள்ள அவருடைய வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளதாக மிரட்டல் விடுத்து இருக்கிறார்.

- Advertisement -

அந்த மிரட்டல் அழைப்பை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் நடிகர் விஜய்யின் வீட்டிற்கு நள்ளிரவில் விரைந்து சென்று சோதனை நடத்தி இருந்தார்கள். அந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் ஒரு புரளி என தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது. மேலும், அந்த விசாரணையில் விழுப்புரத்தை சேர்ந்த நபர் ஒருவர் கட்டுப்பாடு அறைக்கு தொடர்பு கொண்டு நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது என கண்டுபிடிக்கப்பட்டது.

அதுமட்டும் இல்லாமல் அந்த நபர் ஏற்கனவே பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் வீடுகளில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்து இருக்கிறார் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அந்த நபரை போலீஸார் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement