போண்டா மகளின் +2 தேர்வு மதிப்பெண்கள் குறித்து போண்டாமணி நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார். தமிழ் சினிமாவில் வடிவேலு, விவேக் உள்ளிட்ட பல காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர் போண்டா மணி. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் படப்பிடிப்பில் ஏற்பட்ட விஷவாயுவால் போண்டா மணி பாதிக்கப்பட்டுஇருந்தார். பின்னர் நடிகர் போண்டா மணிசென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுஇருந்தார். மேலும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

தனது உடல் நிலை குறித்து பேசிய போண்டா மணி ‘ஆறு மாதமாகவே என்னுடைய உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது. பருவ காதல் என்ற ஒரு படத்தில் நடித்தேன். அந்த படத்தில் சாக்கடையில் விழுகிற மாதிரி சீன் இருக்கும். அதை தத்துரூபமாக எடுக்க வேண்டும் என்று நிஜ சாக்கடையில் என்னை விழ வைத்தார்கள். அந்த சாக்கடை தண்ணீர் உடம்புக்குள் போனதால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டது.

Advertisement

ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சையும் பண்ணினார்கள். இருந்தும் தொடர்ந்து மூச்சு விட சிரமப்பட்டு கொண்டு இருந்தேன்.அப்போது தான் என்னுடைய இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்த விஷயம் தெரிந்தது. என்னுடைய வாழ்க்கையில் எனக்கு இப்படி ஒரு துயரம் ஏற்பட்டது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று கூறி இருந்தார். அப்போது வடிவேலு உங்களை தொடர்பு கொண்டாரா என்று கேட்டதற்கு இல்லை என்று வேதனையுடன் கூறி இருந்தார்.

மேலும்,விவேக் சார் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் நான் யார்கிட்டயும் கையேந்த வேண்டிய அவசியமே வந்து இருக்காது. அவரே ஓடிவந்து உதவியிருப்பார் என்றும் கூறி இருந்தார். போண்டா மணியின் நிலையை அறிந்து மனோபாலா, பார்த்திபன், தனுஷ் என்று பல்வேறு பிரபலங்கள் அவருக்கு உதவி செய்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து நலமுடன் வீடு திரும்பினார்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் தனது மகளின் +2 மதிப்பெண்கள் குறித்தும் தனது மகளுக்கு உதவ முன்வந்த ஐசரி கணேசன் குறித்தும் போண்டா மணி நெகிழ்ச்சியுடன் பேசி இருக்கிறார். அதில் ‘இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏன் என்றால் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டதற்கு எனக்கு கிடைத்த பரிசாக என்னுடைய மகள் 12 ஆம் வகுப்பு தேர்வு 600 மதிப்பெண்களுக்கு 400 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்று இருக்கிறார். இதற்கு பின்னர் கல்லூரியில் சேர்க்க வேண்டும் அதற்கு பணம் வேண்டும் என்று வேதனையாக இருந்தது.

Advertisement

ஆனால், ஐசரி கணேசன் சார் நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது உங்கள் மகள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடைந்தால் எவ்வளவு செலவானாலும் அவர்களை நான் படிக்க வைக்கிறேன் என்று கூறியிருந்தார். அவர் அன்று சொன்னதைப் போல என் மகளின் ரிசல்ட்டை அறிந்த உடனே அவருடைய வேல்ஸ் கல்லூரியில் என்ட்ரன்ஸ் கட்டணம், அட்மிஷன் கட்டணம் கூட வாங்காமல் என் மகளுக்கு bcs படிக்க சீட் கொடுத்துள்ளார். இப்படி ஒரு நல்ல மனிதர் தெய்வத்திற்கு சமம். இது என் உழைப்புக்கு கிடைத்த வெற்றி, நான் எப்போதும் அவருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன் என்று உருக்கமுடன் பேசியிருக்கிறார்.

Advertisement