போண்டா மணியின் மருத்துவ செலவு – முழமையாக ஏற்ற அரசு. நேரில் சென்று சந்தித்த பிரமுகம்.

0
132
bonda
- Advertisement -

உயிருக்கு போராடிவரும் போண்டா மணியின் மொத்த செலவையும் தமிழக அரசு ஏற்றிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் போண்டா மணி. இவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். இவருடைய உண்மையான பெயர் கேதீஸ்வரன். பல போராட்டங்களுக்கு பிறகு தான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்து இருந்தது. இவர் 1991ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளியாகி இருந்த பவுனு பவுனு தான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். மேலும், இவர் வடிவேலு, விவேக் உள்ளிட்ட பல காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். தற்போது இவர் தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோர் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இதுவரை இவர் 270 க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் துணை வேடங்களில் நடித்து இருக்கிறார். இதனிடையே இவர் கன்னட பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி பெயர் மாதவி.

- Advertisement -

போண்டா மணி உடல்நிலை:

இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் படப்பிடிப்பில் ஏற்பட்ட விஷவாயுவால் போண்டா மணி பாதிக்கப்பட்டு இருக்கிறார். பின்னர் நடிகர் போண்டா மணி அவர்கள் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அதோடு இவருடைய இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்து இருக்கிறது.

பார்த்திபன் அளித்த பேட்டி:

தனக்கு உதவி செய்ய நடிகர் சங்கத்திடம் போண்டா மணி கோரிக்கை வைத்து இருந்தார். அதன் பின் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் போன் மூலம் தொடர்பு கொண்டு போண்டா மணி நலம் குறித்து விசாரித்து அவருக்கு தேவையான உதவியை செய்து வருகிறார். அதன்படி போண்டாமணிக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. சனிக்கிழமை சிறிய அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக மருத்துவர் கூறியிருந்தார். முதற்கட்டமாக போண்டாமணிக்கு அன்றாட தேவைக்கு வேண்டிய பண உதவியை என்னுடைய மனிதநேய மன்றத்திலிருந்து செய்திருக்கிறேன்.

-விளம்பரம்-

போண்டா மணியை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன்:

இன்னும் அவருக்கு வேண்டிய உதவிகளையும் செய்வேன் என்று பார்த்திபன் கூறியிருந்தார். இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் போண்டாமணியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்து இருக்கிறார். பின் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த விவரங்களையும் மருத்துவர்களிடம் கேட்டு அறிந்திருக்கிறார். இதனை அடுத்து போண்டாமணியின் மருத்துவ செலவை முழுமையாக அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருக்கிறார்.

அமைச்சர் சுப்பிரமணியன் டீவ்ட்:

மேலும், இது குறித்து அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தனது விட்டார் பக்கத்தில் கூறியிருப்பது, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் போண்டாமணி அவர்களை சந்தித்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்து அதற்கான முழு செலவையும் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கபட்டது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Advertisement