விஜய் படத்தை தயாரிக்க போனிகபூர் போட்ட ரெண்டு கண்டிஷன்- என்ன சொல்லி இருக்காருன்னு தெரியுமா?

0
377
- Advertisement -

விஜய் படத்தை தயாரிக்க ரெடி. ஆனால், இரண்டு கண்டிஷன்கள் என்ற போனிகபூர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் முடி சூடா மன்னனாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வரும் படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் பீஸ்ட். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

-விளம்பரம்-
Vijay 66 Director Vamsi | விஜய் 66 பட இயக்குனர் வம்சி

இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு இருந்தது. படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்ததாக விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் இணைந்து பல படங்களில் பணிபுரிந்து இருக்கிறார்கள்.

இதையும் பாருங்க : தனது மகளை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்துள்ள தாமிரபரணி பட நடிகை – இவருக்கு இவ்ளோ பெரிய மகளா.

- Advertisement -

போனிகபூர் பற்றிய தகவல்:

மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய்யின் படத்தை தயாரிக்க இருப்பதாக போனிகபூர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். பாலிவுட்டில் பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் போனிகபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் தொடர்ச்சியாக அஜித்தின் படங்களைத் தயாரித்திருக்கிறார். அஜித்தின் நேர்கொண்ட பார்வை. வலிமை ஆகிய இரண்டு படங்களையும் போனி கபூரே தயாரித்திருந்தார்.

நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்ட  போனி கபூர்.! - Tamil Behind Talkies

போனிகபூர் தயாரித்த படங்கள்:

இந்த இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனையடுத்து தற்போது மூன்றாவது முறையாக போனிகபூர் அவர்கள் அஜித்தின் ஏகே 61 என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் அஜித், வில்லன் ஹீரோ என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் நெஞ்சுக்கு நீதி என்ற படத்தையும் போனிகபூர் தயாரித்திருக்கிறார்.

-விளம்பரம்-

போனிகபூர் அளித்த பேட்டி:

இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் தான்யா ரவிச்சந்திரன், சிவானி ராஜசேகர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்த படம் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் போனிகபூர் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அவரிடம் விஜய் படத்தை எப்போது தயாரிப்பீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு போனிகபூர் கூறியிருப்பது,

Booney Kapoor About Ajith Fans | விஜய் குறித்து போனி கபூர்

விஜய் படத்திற்கு போட்ட கண்டிஷன்:

விஜய் படத்தை தயாரிக்கக் கூடாது என்றெல்லாம் எதுவும் இல்லை. நல்ல கதை, நல்ல இயக்குனர் கிடைத்தால் விஜய் படங்களை தயாரிக்க நான் தயாராக உள்ளேன் என்று கூறியிருந்தார். இப்படி போனிகபூர் அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் படு வைரலானது. இதனையடுத்து நெட்டிசன்கள் பலரும் நல்ல கதை, இயக்குனருகாகத் தான் போனிகபூர் காத்திருக்கிறார் என்றும், அஜித்தை அடுத்து விஜய் படத்தை தான் போனிகபூர் தயாரிப்பார் என்றும் கூறி வருகிறார்கள்.

Advertisement