இந்தியாவில் அமேசான், ஃப்ளிப்கார்ட் மூலம் ஆன்லைன் வர்த்தகம் பிரபலமான போதும், ஆன்லைன்மூலமான பணப் பரிவர்த்தனைகளைச் செய்வதற்கு மக்கள் அவ்வளவாகப் பழகவில்லை. டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு தகவல்களை இணையதளங்களில் பதிவு செய்வதில்  மக்கள் தயக்கம் காட்டினார்கள்.

இப்படி போய்கொண்டே இருக்க அதற்குப்பிறகுதான் பேடிஎம், போன் பே, டெஸ் (Tez), மோபிக்விக் போன்ற தனியார் வேலட்டுகளின் விளம்பரங்கள் இந்தியப் பத்திரிகைகளிலும், பில்போர்டுகளிலும் அலங்கரிக்கத் தொடங்கின. பின்னர் அந்த ஆப் பிரபலமடைய அதனை கூகுள் நிறுவனம் முழுவதும் தன் கட்டுப்பாட்டிற்கு எடுத்துக்கொண்டது.

இதையும் படியுங்க : ஏ டி எம் கார்டு இல்லாமையே இப்போ ஏ டி எம்மில் பணம் எடுக்கலாம்.! எப்படி தெரியுமா.! 

Advertisement

இந்த நிலையில் கூகுள் பே ஆப்பில் புதிய வசதி ஒன்று புகுத்தப்பட்டுள்ளது. அது என்னவெனில் ஐ.ஆர்.சி.டி.சி-யில் ட்ரைன் டிக்கெட் புக் செய்ய இனி ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளத்திற்குச் சொல்ல வேண்டியதில்லை, கூகுள் பே செயலி மூலமே உங்களின் ரயில் டிக்கெட்களை புக் செய்துகொள்ளலாம். டிக்கெட்களை பதிவு செய்து கூகுள் பே ஈசி பேமெண்ட் முறைப்படி எளிதாய் பணம் செலுத்திக்கொள்ளலாம்.

இதில் சிறப்பான செய்தி என்னவெனில் கூகுள் பேபயன்படுத்தி ரயில் டிக்கெட் புக் செய்பவர்கள் , கூகுள் பே செயலி மூலம் ரயில் டிக்கெட் புக்கிங் உடன் சேர்த்து ரயிலில் எத்தனை காலி இருக்கைகள் நிரப்பப்படாமல் உள்ளது, வெயிட்டிங் லிஸ்டு எவ்வளவு போன்ற அனைத்து தகவலைகளையும் அறிந்து கொள்ளலாம்.

Advertisement

Advertisement
Advertisement