கோடை காலம் வந்தாலே அனைவரும் சந்திக்கும் பிரச்சினை என்றால் அது தண்ணீர் பிரச்சினை தான். அதிலும் சென்னை போன்ற பெரிய நகரங்களில் கோடை காலங்களில் நேரிடும் தண்ணீர் பிரச்சினைகள் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. இந்த நிலையில் வரும் கோடை காலத்தில் தண்ணீர் பிரச்சனைகள் குறித்து புகார்களை மக்கள் தெரிவிக்க சென்னை மாநகராட்சி புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்துள்ளது.

சென்னை மெட்ரோ குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் CMWSSB எனப்படும் புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப் வசதியில் புகார் அளிக்கும் போது புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க : ஏ டி எம் கார்டு இல்லாமையே இப்போ ஏ டி எம்மில் பணம் எடுக்கலாம்.! எப்படி தெரியுமா.! 

Advertisement

இந்த CMWSSB ஆப்பை உங்கள் ஸமார்ட்போனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம்செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த பின்னர் பொதுமக்கள் புகார் அளிக்கும் போது பெயர், மொபைல் எண் மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை அளிக்க வேண்டும். அதில் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியாக பதில் அளிக்க வேண்டும்.

அப்போது தான் புகார் பதிவு செய்யப்படும் என சென்னை மெட்ரோ குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம்சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு புகார் செய்யப்பட்ட பிறகு அது குறித்த எஸ்எம்எஸ் உறுதி தகவல் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் தெரிவித்த பிறகு அதன் தற்போதைய நிலை என்ன என்ற விவரங்களை பார்க்க முடியும்

Advertisement

Advertisement

Advertisement