வங்கிக் கணக்கு வைத்திருப்போர் அனைவருமே பெரும்பாலும் ஏடிஎம் கார்டு பயன்படுத்திய பணங்களை எடுத்து வந்தனர். இதில் ஒரு சிலர் மட்டுமே இன்டர்நெட் பேங்கிங் பயன்படுத்தி பண பரிவர்த்தனைகளை செய்தாலும் பெரும்பாலான பயனாளர்கள் ஏடிஎம்மை தான் நம்பியுள்ளனர். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிப் பொருத்தப்பட்ட ஏடிஎம் கார்டு தான் ஏடிஎம்மில் வேலை செய்கின்றது.

இது ஒருபுறம் பாதுகாப்பான பரிவர்த்தனையாக இருந்தாலும் பெரும்பாலான வாடிக்கையாளர்களிடம் சிப் பொருத்தப்பட்ட ஏடிஎம் கார்டு இன்னும் கிடைக்கப் பெறவில்லை. இதனால் வங்கிகளில் நீண்ட கியூவில் நின்று பணத்தை எடுக்க அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சிக்கல்களை தடுக்க ஸ்டேட் பாங்க் நிறுவனம் தற்போது புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது அந்த செயலின் பெயர் யோனா (Yono App).

Advertisement

இந்த செயலி பிலே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது. இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் ஏ டி எம் இல்லாமலேயே பணம் எடுக்காமல். இந்த செயலியை உங்கள் போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பின்னர் 6 இலக்கு பயனர் அடையாள என்னை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் அக்கௌன்ட் மொபைல் எண்ணையும் இணைத்து கொள்ளுங்கள்.

6 எண் அடையாள இலக்கு எண்ணைப் பதிவு செய்ததும் ஓ.டி.பி எண் மெசேஜ்ஜாக வழங்கப்படும். அதனைப் பயன்படுத்தி உங்களுக்கான யோனா கேஷ் அக்கௌன்ட்டை உருவாக்கிக்கொள்ளுங்கள். அருகில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கியில் 6 எண் பாஸ்வோர்டை பயன்படுத்தி ஏ.டி.எம் கார்டு இல்லாமல் இனி பணம் எடுத்துக்கொள்ளலாம்.

Advertisement

Advertisement
Advertisement