என்னை அறிந்தால், வீரம் படத்தில் தல அஜித்தை மிரட்டியது நான் தான் – பிரபல நடிகர் !

0
2144

தமிழ் சினிமாவில் உள்ள ரஜினி, கமல் விஜய், அஜித் போன்ற பெரிய ஹீரோக்களுடன் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்பது ஹீரோயின்களின் ஆசை மட்டுமல்ல, தற்போதைய சினிமாவில் துணைநடிகர்கள், காமெடி நடிகர்கள் என பலருக்கும் அஜித், விஜயுடன் ஒரு படமாவது நடித்துவிட்டு வேண்டும் என இருக்கின்றனர்.
இப்படி தான், நடிகர் போஸ் வெங்கட்டிற்கும் ஆசை உள்ளது. சமீபத்தில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த தீரன் படம் திரையில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடிகர் கார்த்திக் போலீஸ் உயர்திகாரியாக நடித்திருப்பார்.

அவருக்கு உதவியாக போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருப்பவர் தான் போஸ் வெங்கட். இவர் பல படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தாலும், தீரன் படத்தில் படம் முழுக்க கார்த்திக்கு இணையாக நடித்திருப்பார்.

தற்போது அஜித்துடன் நடிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் போஸ் வெங்கட். சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது,
என்னை அறிந்தால் படத்தில் ஆஷிஷ் வித்யார்த்திக்கும், வீரம் பட வில்லனுக்கும் நான் தான் வாய்ஸ் கொடுத்தேன். அப்படியே அவருடன் நேரில் நடிக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை.
எனக் கூறினாட் போஸ் வெங்கட்.