கோவிலில் பெருமாள் இல்லைனு மக்களுக்கு சொல்லுங்க, யாரும் கோவிலுக்கு போகாதீங்க – பிராமணர்களுக்கு பிராமணர் வெளியிட்ட வீடியோ.

0
2494
stalin
- Advertisement -

‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது போல சில எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் பிராமின அர்ச்சர்கள் யாரும் கோவிலுக்கு செல்ல வேண்டாம் என்று பிராமண அர்ச்சகர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதன் முறையாக தமிழத்தின் முதலமைச்சராக பதியேற்றார் தி மு க தலைவர் ஸ்டாலின்.

-விளம்பரம்-

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் ஸ்டாலினின் 100 நாள் ஆட்சியின் தொடர்ச்சியாக பல்வேரு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் ஒரு திட்டமாக  ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்கிற திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது, இதுநாள் வரை பெரும்பாலான கோவில்களில் பிராமணர்கள் மட்டுமே கோவிலில் அர்ச்சகராக இருந்து வந்தனர்.

- Advertisement -

ஆனால், அணைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் தான், மு க ஸ்டாலின் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற 100வது நாளில்  ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ திட்டத்தை நடைமுறைபடுத்தியதோடு  58 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

இந்த திட்டத்திற்கு பலர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற அறிவிப்பை ரத்து செய்து, ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க உத்தரவிடக்கோரி, அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. மேலும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு பா.ஜ.க தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

-விளம்பரம்-

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு எதிரான வழக்கில் இன்னும் தீர்ப்பு அளிக்கப்படவில்லை. இந்நிலையில் நீதிமன்றத்தில் தமிழக அரசு, ‘முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்கப்படுகின்றனர்’ என்று விளக்கம் கொடுத்தது. இப்படி ஒரு நிலையில் பிராமணர் ஒருவர், எந்த அர்ச்சகரும் கோவிலுக்கு போவாதீங்க, வீட்டில் பெருமானை பூஜை செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

Advertisement