நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது. அந்த வகையில் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாடகர் எஸ் பி பிக்கு திடீரென உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம்தெரிவித்து இருந்தது. அவரின் உடல்நிலையை மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர். அதே போல பாடகர் எஸ் பி பி கொரோனா தொற்றில் இருந்து மீண்டார்.

Advertisement

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ் பி பி விரைவில் குணமடைய வேண்டும் என்று பல்வேறு ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் பிராத்தனை செய்து வந்தனர். மேலும், #Prayforspb என்ற ஹேஷ் டேக்கை கூட உருவாக்கி எஸ் பி பிகாக ரசிகர்கள் தொடர்ந்து பதிவுகளை போட்டு வந்தனர். இப்படி ஒரு நிலையில் எஸ் பி பியின் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடமா இருப்பதாக மருத்துவ நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், தொடர்ந்து எஸ் பி பியின் தொடர்ந்து உடல் நிலை மோசமாக இருந்து வருவதாகவும் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று இன்று காலைமுதல் கூறப்பட்டுவந்தது. இந்த நிலையில் மதியம் 1.04 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிறந்தது. மேலும், கொரோனா பாதிப்பு இல்லாததால் இன்று மாலை 4 மணியளவில் நுங்கம்பாக்கம் வீட்டில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படையுள்ளது.அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று மருத்துவ அறிக்கை மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

Advertisement
Advertisement