படத்தில் வாணி போஜன் சொன்ன நம்பரால் தொழிலதிபருக்கு தொந்தரவு. போலீசில் புகார்.

0
1641
Vanibhojan
- Advertisement -

சினிமாவில் நடித்து வரும் பல நடிகர்கள் தொலைக்காட்சி தொடர்களில் இருந்தும்,விளம்பரங்களில் இருந்தும் தான் வந்தவர்கள். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்து உள்ளார் நடிகை வாணி போஜன். சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் ஆன சீரியல்களில் தெய்வமகள் சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடித்து வந்தார். அதிலும் ரசிகர்கள் சத்யா என்பதைவிட இவரை தாசில்தார் என்று தான் அதிகம் அழைப்பார்கள். இவர் முதலில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்யில் தான் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து வடிவமைப்பு விளம்பர வேலைகளையும் செய்து வந்துள்ளார்.

-விளம்பரம்-
ttn

- Advertisement -

அதன் மூலமாகத் தான் சின்னத்திரையில் உள்ள தொடர்களில் நடிக்க தொடங்கினார். மேலும், வாணி போஜன் அவர்கள் தெய்வமகள் சீரியலுக்கு பிறகு எந்த ஒரு சீரியலிலும் நடிக்க வில்லை. இதனைத் தொடர்ந்து வாணி போஜன் அவர்கள் சினிமா திரையில் கலக்கி வருகிறார். இவர் முதன் முதலாக விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அஷ்வத் மாரிமுத்து என்ற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ள படம் தான் ஓ மை கடவுளே. இந்த படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

இந்த படம் காமெடி, ரொமான்ஸ் கலந்த கலவை படம். இந்த படத்தை ஆக்சிஸ் பிலிம் பேக்டரி தயாரித்து உள்ளது. இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து உள்ளார். மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி அவர்கள் கவுரவ தோற்றத்தில் நடித்து உள்ளார். இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு திரையரங்கில் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் வாணி போஜன் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பேச வைத்தது. இந்நிலையில் இந்த படத்தில் வாணி போஜன் அவர்கள் ஒரு மொபைல் நம்பர் சொல்வார்.

-விளம்பரம்-
 ஓ மை கடவுளே

அது உண்மையாகவே ஒருவரின் நம்பர் தான். தினமும் அவருக்கு 50 பேராவது போன் செய்து வாணியுடன் பேச வேண்டும் என்று கேட்டு டார்ச்சர் செய்து வருகின்றார்கள். ஒரு கட்டத்தில் அந்த நபர் என்ன செய்வது என்று தெரியாமல் படக்குழுவினர்கள் மீது போலீசில் புகார் கொடுத்து உள்ளார். இந்த தகவல் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மாதிரி பொதுமக்களின் மொபைல் நம்பர்களை சினிமா பிரபலங்கள் பயன்படுத்துவது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல பேர் பல பிரச்சினைகளுக்கு அவதிப்பட்டு வருகிறார்கள்.

Advertisement