‘தளபதி’ன்னு தான் சொல்லணும் என்று விஜய் மக்கள் இயக்க பெண் நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் வழங்கி இருக்கும் அறிவுரை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இவருக்கு விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை. இதனால் விஜய் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. மேலும், இவர் சமீபத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நேரில் சந்தித்து வழங்கி இருந்தார்.

Advertisement

விஜய் மக்கள் இயக்கம்:

இந்த விழாவில் விஜய் அவர்கள் மாணவர்களின் எதிர்காலம், கல்வி, அரசியல், தலைவர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசி இருந்தார். மாணவர்களுக்கு விஜய் பரிசு வழங்கியது குறித்து பலருமே பாராட்டி இருந்தார்கள். மேலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த காமராசர் அவர்களின் பிறந்த நாள் அன்று தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இலவசமாக இரவு நேர பயிலகத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு படிப்புக்கு உதவிகளை செய்து வருகிறார். எனவே விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது.

ஆலோசனைக் கூட்டம் :

பின் சில வாரங்களுக்கு முன் விஜய் மக்கள் இயக்கத்தின் சமூக ஊடக பிரிவு ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் நடைபெற்று இருந்தது. இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதிலிருந்து தொகுதி வாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் விஜய் மட்டும் இல்லை. பின் கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் கூறியது, 31 ஆண்டுகள் முன் தொடங்கபட்ட விஜய் ரசிகர் மன்றம் 15 ஆண்டுகளுக்கு விஜய் மக்கள் இயக்கமாக மாறி பல அணிகளை கட்டமைத்து வருகிறோம்.

Advertisement

புஸ்ஸி ஆனந்த் வழங்கிய அறிவுரை:

விஜய் மக்கள் இயக்கத்தினர் சமூக வலைத்தளங்களில் இனம், மொழி, ஜாதி, மதம் வட்டத்தில் சிக்காமல் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் பதிவிட வேண்டும். தரம் தாழ்ந்த கருத்துகளை பதிவிட கூடாது. நீங்கள் அளிக்கும் பதில்கள் கருத்தியல் சார்ந்ததாக இருக்க வேண்டும். தலைமையின் ஒப்புதல் இல்லாமல் மற்றவர்களின் பதிவுகளை தலைமையின் மற்றும் ஷேர் செய்யக் கூடாது. தலைமை வெளியிடும் பதிவுகளுக்கான லைக் மற்றும் ஷேர் மில்லியனை தாண்ட வேண்டும் என்று கூறி இருந்தார். இந்நிலையில் இன்று சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் :

இந்த கூட்டத்தையும் புஸ்ஸி ஆனந்த் தலைமை தாங்கி வகித்திருக்கிறார். இந்த கூட்டத்தில் பெண் நிர்வாகி ஒருவர், நாங்கள் ஆசைப்படுவது ஒன்றே ஒன்றுதான். விஜயை நாங்கள் நேரில் சந்திக்க விரும்புகிறோம். அவர் உங்களுக்கு வேண்டுமானால் தலைவராக இருக்கலாம். எங்களுக்கு அவர் என்றைக்குமே உடன்பிறவா சகோதரர் தான். நான் சிறுவயதிலிருந்து விஜய் ரசிகை என்று கூறி இருந்தார். உடனே புஸ்ஸி ஆனந்த், தலைவர்களின் பெயரை எப்போதுமே சொல்லக்கூடாது. தளபதி என்றுதான் சொல்ல வேண்டும் என்று அறிவுரை கூறினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலருமே இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதற்குள் இப்படியெல்லாமா என்று விமர்சித்து வருகின்றனர்.

Advertisement