Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/விமர்சனம்2022.08.13பதிப்பு · TA
விமர்சனம்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பிணங்களுக்கு மத்தியில் ஒரு கிரைம் திரில்லர் - அமலா பாலின் 'கடாவர்' முழு விமர்சனம் இதோ.

எழுதியவர்subhashini13 ஆகஸ்ட், 2022 அன்று 02:27 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக அமலா பால் இருக்கிறார். தற்போது இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கடாவர். இந்த படத்தை மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கி இருக்கிறார். இதில் நடிகை அமலாபால் உடன் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா, நிழல்கள் ரவி, வேலு பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மெடிக்கல் கிரைம் த்ரில்லர் ஜானரில் இந்த படம் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். இந்த படம் இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகி இருக்கிறது. பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்திருக்கும் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

பிணங்களுக்கு மத்தியில் ஒரு கிரைம் திரில்லர் - அமலா பாலின் 'கடாவர்' முழு விமர்சனம் இதோ.

கதைக்களம்:

படத்தின் தொடக்கமே அடுத்தடுத்து நடக்கும் கொலைகள், திரிலிங் என்று ஆரம்பிக்கிறது. அப்போது பிரபல மருத்துவரான சலீம் ரகுமானை ஒரு மர்ம மனிதன் காரோடு வைத்து எரித்துக் கொலை செய்து விடுகிறார். இது தொடர்பாக போலீஸ் விசாரிக்கிறது. இந்த கொலைக்கு சிறையில் இருக்கும் வெற்றிக்கும் தொடர் இருப்பது விசாரணையில் தெரிய வருகிறது. ஆனால், சிறையில் இருக்கும் வெற்றியால் இந்த கொலையை எப்படி செய்ய முடியும் என்ற குழப்பம் ஏற்படுகிறது.

இதை அமலா பால் போலீஸ் உடன் சேர்ந்து கண்டுபிடிக்க முயல்கிறார். இந்த கொலையை செய்ய வெற்றிக்கு உதவிய மர்ம நபர் யார்? இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் எந்த இடத்திலும் சலிப்பு இல்லாமல் கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். இந்த படத்தில் தடயவியல் துறை நிபுணரான பத்ரா என்ற கதாபாத்திரத்தில் அமலா பால் நடித்துள்ளார்.

பிணங்களுக்கு மத்தியில் ஒரு கிரைம் திரில்லர் - அமலா பாலின் 'கடாவர்' முழு விமர்சனம் இதோ.

மேலும், இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் அமலாபால் மிரட்டி இருக்கிறார் என்றே சொல்லலாம். இவர் இந்த படத்தின் மூலம் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார். அதிலும் பிணத்திற்கு நடுவில் அமலாபால் உட்கார்ந்து சாப்பிடும் காட்சிகள் எல்லாம் வேற லெவல் இருக்கிறது. இந்த படம் கண்டிப்பாக அமலாபாலுக்கு கம்பேக் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிணங்கள், சவக்கிடங்கு, கொடூரமான கொலைகள் என ஒவ்வொரு நிமிடமும் திக் திக் பாணியிலேயே கதை சென்றுகொண்டிருக்கிறது. முதல்பாதியில் கொலைக்கான காரணம் எனப் புரியாமல் கதை நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் தெளிவான விளக்கத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. படத்தின் பிற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

பிணங்களுக்கு மத்தியில் ஒரு கிரைம் திரில்லர் - அமலா பாலின் 'கடாவர்' முழு விமர்சனம் இதோ.

போலீஸுடன் கொலையாளியை தேடும் அமலாபால் இறுதியில் கண்டுபிடித்தாரா என்பதே படத்தின் சஸ்பென்ஸ். திரில்லிங்க்கு தேவையான காட்சிகளை இயக்குனர் கச்சிதமாக கொடுத்திருக்கிறார்.
காசு கொடுத்த சென்ற ரசிகர்களுக்கு அமலா பாலின் கடவார் படம் ஓகே என்று சொல்லலாம்.

நிறைகள் :

இயக்குனர் கதையை கொண்டு சென்ற விதம் சிறப்பு.

அமலாபாலின் நடிப்பு வேற லெவல்.

நடிகர்களும் தங்கள் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

பின்னணி இசை, ஒளிப்பதிவு பக்கபலமாக இருக்கிறது.

பிணங்களுக்கு மத்தியில் ஒரு கிரைம் திரில்லர் - அமலா பாலின் 'கடாவர்' முழு விமர்சனம் இதோ.

குறைகள் :

படத்தில் ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடு இருக்கிறது.

மொத்த படமும் அமலாபால் தூக்கி சென்று இருக்கிறார்.

முதல்பாதி பார்வையாளர்களை குழப்பத்திற்கு தள்ளியிருக்கிறது.

மற்றபடி பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்க்கு குறைகள் இல்லை.

மொத்தத்தில் கிரைம் திரில்லர் விரும்பிகளுக்கு கடாவர் - பக்கா விருந்து என்று சொல்லலாம்.

தலைப்புகள்
#கடாவர்#Amala Paul#Cadaver#கடாவார் விமர்சனம்#Cadaver Movie Review
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement