சூதாட்ட சர்ச்சையில் தமன்னா – கைது செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு.

0
786
tamanna
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆன்லைன் ரம்மி விளையாட பணத்தை தோற்ற இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சென்னை அமஞ்சிக்கரை பகுதியில் உள்ள கடை ஒன்றில் பணியாற்றி வந்த இளைஞர், தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்திருக்கிறார். ஊரடங்கு காரணமாக கல்லூரி இல்லாததால் டாட்டூ கடையில் பணிபுரிந்து வந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், ஆன்லைனில் ரம்மி விளையாடி வருவதை வாடிக்கையாக வைத்துவந்திருக்கிறார். ஆனால் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தனது பணம் அனைத்தையும் இழுந்துள்ள அந்த இளைஞர், தான் பணியாற்றி வந்த டாட்டூ கடையின் உரிமையாளருக்கு சொந்தமான 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து ரம்மி விளையாட்டில் தோற்றுள்ளார். பணத்தை இழந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.

- Advertisement -

இதனால் அந்த இளைஞர் தான் பணியாற்றி வந்த டாட்டூ கடையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் தனது தற்கொலைக்கு காரணம் ஆன்லைனில் விளையாட்டில் பணம் தோற்றது தான் என்றும் அவர் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் ஆன்லைனில் தற்போது எக்கச்சக்கமான ரம்மி விளையாட்டு செயலிகள் இருக்கிறது இப்படி ஒரு நிலையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் அதன் விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்ட இருவரையும் கைது செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் தான் இந்த மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் ஆன்லைன் சூதாட்டங்கள் தற்போது அதிகரித்து வருவதாகவும் இந்த விளையாட்டில் இளைஞர்கள் பலர் அடிமையாகி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், விராட் கோலி தமன்னா போன்ற பிரபலங்களை வைத்து விளம்பரங்களை செய்து இளைஞர்களை மூளைச்சலவை செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார். எனவே இது போன்ற ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை முடக்க வேண்டும் என்றும் அத்தகைய ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்காக விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை தமன்னா போன்றவர்கள் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்

-விளம்பரம்-
Advertisement