நடிகை த்ரிஷாவின் முன்னாள் காதலர் மீது போலீசில் மோசடி வழக்கு.

0
784
trisha
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகை திரிஷாவின் முன்னாள் காதலரும் திரைப்பட தயாரிப்பாளருமான வருண் மணியன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நடிகை திரிஷாவிற்கும் வருண்மணியன் என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு பெற்றோர்களால் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் த்ரிஷாவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள்.

-விளம்பரம்-

த்ரிஷா மற்றும் வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள வருண் மணியன் வீட்டில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். இதைத்தொடர்ந்து கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் திரிஷா விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். அதேபோல திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து நடிப்பேன் என்றும் கூறியிருந்தார் திரிஷா.

- Advertisement -

ஆனால், இவர்கள் திருமணம் திட்டமிட்டபடி நடைபெற வில்லை. திருமணத்திற்கு முன்னர் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் இந்த திருமணம் நின்றுபோனது என்று அப்போது செய்திகள் வெளியானது. த்ரிஷாவை திருமணம் செய்து கொள்வதாக இருந்த வருண் மணியன் தமிழில் காவியத்தலைவன், வாய் மூடி பேசவும் போன்ற படங்களை தயாரித்து இருக்கிறார். மேலும், சென்னை நந்தனத்தில் ரேடியன்ஸ் ரியாலிட்டி என்ற கட்டுமான நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தையூரில் ரேடியன்ஸ் ரியாலிட்டி நிறுவனத்தின் கட்டுமானத்தில், இரண்டு பிளாட்டுகளை தலா ரூ. 2 லட்சம் கொடுத்து முன்பதிவு செய்ததாகவும் பிளாட்டுகளுக்கான முழுத்தொகை தராததால், தங்களிடம் தெரிவிக்காமல் வருண் மணியன் வேறொருவருக்கு விற்பனை செய்துள்ளதாக வருண் மீது அயனம்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 27-ம் தேதி கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். வெங்கடேசன் முன் தொகையாக கொடுத்த  ரூ. 4 லட்சம் பணத்தை திருப்பி கேட்டுள் போது வாக்குவாதம் ஏற்பட்டு மிரட்டியதாக வெங்கடேசன் புகாரில் தெரிவித்துள்ளார்.வெங்கடேசன் அளித்த புகாரில் மட்டும் 406- நம்பிக்கை மோசடி, 420- பண மோசடி, 506(1) மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

-விளம்பரம்-

Advertisement