விஜய் தேவர்கொண்டவை நம்பி ஒரு கோடி ரூபாய்யை இழந்த கேத்ரின் தெரசா.

0
4093
catherine-tresa
- Advertisement -

‘நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்கிறியா’ என்ற ஓரு டயலாக் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன்பக்கம் கட்டிப் போட்டவர் நடிகை கேத்ரின் தெரசா. நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் தான் கேத்ரின் தெரசா தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். அந்த படத்திற்கு பின்னர் இவர் கணிதன், கலகலப்பு-2, அருவம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தார். மெட்ராஸ் படத்தின் மூலம் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமானர். பின் இவர் திடீரென்று படங்களில் கவர்ச்சி கன்னியாக வலம் வர தொடங்கினார்.

-விளம்பரம்-

இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய பல மொழி படங்களில் நடித்து வந்தார். இவர் பல படங்களில் கவர்ச்சியாகவே நடித்தார். இதனாலேயே இவரது மார்க்கெட் குறைந்து விட்டது. தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் மாறி மாறி நடித்துக் கொண்டிருந்தார். தற்போது நடிகை கேத்ரின் தெரேசா கைவசம் எந்த படமும் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். கடைசியாக இவர் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளிவந்த வேர்ல்ட் ஃபேமஸ் லவர் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளிவந்து தோல்வியை தழுவியது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும், இந்த படத்தில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஹீரோ விஜய் தேவர் கொண்டா தான் காரணம் என்று தயாரிப்பாளர் போர்க்கொடி கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவரிடமிருந்து எழுதி வாங்கிய வீட்டை திருப்பித் தரவேண்டும் என்றும் தயாரிப்பாளர் கூறியிருக்கிறார். மேலும், இப்படம் வெற்றி அடையும் என்ற கனவில் இருந்த கேத்ரின் தெரசாவுக்கு படம் தோல்வியடைந்தது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. இந்த படத்தின் சமயத்தில் தான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் தருவதாக கேத்ரினாவை தேடி ஒரு படம் வாய்ப்பு வந்தது. அது ஒரு சீனியர் ஹீரோ படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், நடிகை கேத்ரின் அவசரப்பட்டு அதை ஏற்க மறுத்து விட்டார். அதனையடுத்து தற்போது கைவசம் எந்த படமும் இல்லாமல் கேத்ரின் தவித்துக் கொண்டிருக்கிறார். படங்கள் எதுவும் இல்லாத நிலையில் இருப்பதால் உடல் வெயிட் போட கூடாது என்பதற்காக தன்னுடைய முழு கவனத்தையும் ஜிம்மில் காண்பித்து வருகிறார் கேத்ரின். இவர் தினமும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு 5 கிலோ வரை எடையைக் குறைத்துக் கொண்டு ஒல்லி ஆகியிருக்கிறார். இதன் மூலமாக இவருக்கு பட வாய்ப்புகள் வருமா? என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement