சமூக பொறுப்பு உடையவர் செய்யும் செயலா இது ?விக்ரமனை கிண்டல் செய்யும் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ

0
376
vikraman
- Advertisement -

விக்ரமன் செய்த செயலை கமல் கண்டிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது ஐந்தாவது வாரம் தொடங்கி இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து, மெட்டிஒலி சாந்தி,அசல்,ஷெரினா ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். வழக்கம் போல் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருப்பவர் தான் விக்ரமன். இவர் விசிக மாநில செய்தி தொடர்பாளர் ஆவார்.

- Advertisement -

விக்ரமன் குறித்த தகவல்:

இவர் திருநெல்வேலியை சேர்ந்தவர். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தொடரில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த சீரியலை சுந்தர் கே விஜயன் இயக்கியிருந்தார். நடிகர் சரத்குமாரின் நிறுவனம் இந்த சீரியலை தயாரித்திருந்தது. இந்த தொடர் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாகக் கொண்டது. இந்த சீரியலில் விக்ரமனுடன் மதுமிலா நடித்திருந்தார். அதற்குப் பிறகு விக்ரமன் விசிக மாநில செய்தி வாசிப்பாளராக களம் இறங்கி இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமன்:

தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக அரசியல் தொகுப்பாளர்களில் ஒருவரான விக்ரமன் கலந்து கொண்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் விக்ரமனுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இவர் எந்த பிரச்சனை என்றாலும் குரல் கொடுத்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் மிஸ்டர் பர்ஃபெக்ட் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் டேக் செய்து இருக்கிறார்கள். இதனால் நாளுக்கு நாள் இவருக்கு ஆதரவு அதிகமாகி வருகிறது.

-விளம்பரம்-

விக்ரமன் செய்த செயல்:

பலரும் இவர் நடிகர் ஆரிப்போல ட்ரை செய்கிறார் என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் விக்ரமன் செய்த செயலை கண்டித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வரும் பதிவு சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதாவது, விக்ரமன் அவர்கள் கை கழுவ பைப்பை திறந்து விட்டு வேறு இடத்திற்கு சென்று இருக்கிறார். இதனால் சில நிமிடங்கள் தண்ணீர் வீணாகி இருக்கிறது. அதற்கு பிறகு தான் அவர் பைப்பை மூடி இருக்கிறார்.

கேலி செய்த நெட்டிசன்கள்:

இந்த வீடியோவை தான் நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு, உங்களுடைய எல்லா மூவ்மெண்ட்டையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் நிறைய தண்ணீரை வீணாக்கி இருக்கிறீர்கள். எல்லாத்துக்கும் கருத்து சொல்லும் நீங்களே இப்படி செய்யலாமா? சமூக பொறுப்பு அக்கறையுடன் இருப்பவர் செய்யும் செயலா? என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்கள். அதோடு இந்த வாரம் கமல் கண்டிப்பாக தண்ணீர் சேமிப்பு பற்றி விக்ரமனிடம் சொல்லுவார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Advertisement