நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூல் சாதனையும் செய்திருக்கிறது. மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் நடிகர் சங்கத்தில் பொது செயலாளராகவும் இருக்கிறார்.
அதோடு தமிழ் சினிமாவில் ‘புரட்சித் தளபதி’ என்று நடிகர் விஷாலை அழைக்கிறார்கள். தற்போது விஷால் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக விஷால்- சுந்தர்.சி கூட்டணியில் வெளியாகி இருந்த படம் தான் மதகஜராஜா. இந்த படத்தில் விஷாலுடன் சந்தானம், சோனு சூட், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, மணிவண்ணன், பாலா, மயில்சாமி, சிட்டிபாபு உட்பட பலர் நடித்து இருந்தார்கள்.
விஷால் திரைப்பயணம்:
ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படம் 2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுவதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனை காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. சமீபத்தில் தான் இப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி இருந்தது. சோசியல் மீடியாவிலும் இப்படம் குறித்து அதிகமாக பேசப்பட்டு வந்தது.
விஷால் குறித்த தகவல்:
மேலும், மற்ற பொங்கல் ரிலீஸ் படங்களை காட்டிலும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் இப்படம் பெற்றது. இதை அடுத்து இந்த படத்தினுடைய வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. தற்போது நடிகர் விஷால் அவர்கள் பிஸியாக படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இவர் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டாலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. 40 வயதாகியும் முரட்டு சிங்கிளாகவே விஷால் இருக்கிறார்.
விஷால் குடும்பம்:
அதுமட்டுமில்லாமல் விஷால் குடும்பத்தினர் நகை வியாபாரத்தில் தான் சிறந்து விளங்குகிறார்கள். அவருடைய அப்பா உட்பட குடும்ப உறவினர்கள் எல்லோருமே நகைக்கடை நடத்தி வருகிறார்கள். நடிகர் விஷாலுக்கு ஐஸ்வர்யா என்ற உடன்பிறந்த தங்கையும் இருக்கிறார். இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு தான் திருமணம் நடந்தது. இவர் பிரபல நகைக்கடை அதிபர் உம்மிடி கிரிட்டிஸ் என்பவரை தான் திருமணம் செய்து இருக்கிறார். விஷால் தங்கையின் திருமணத்தில் ஏராளமான திரை பிரபலங்கள், அரசியல்வாதிகளெல்லாம் கலந்து கொண்டிருந்தார்கள்.. அதற்கு பின் கடந்த 2022 ஆம் ஆண்டு விஷாலின் தங்கைக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்தது.
விஷால் தங்கை கணவர் மீது புகார்:
இப்படி இருக்கும் நிலையில் விஷால் தங்கையின் கணவர் மீது வழக்கு பதிவு செய்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்துகிறது. அதாவது, நகைக்கடையின் ஓனரான உம்மிடி கிரிட்டிஸ் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். காரணம், போலி ஆவணங்கள் மூலம் வீட்டு கடன் மோசடிக்கு உடந்தையாக இருந்தார் என்றும் கிட்டதட்ட 2.5 கோடி பணம் வாங்கி மோசடி செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.