இப்போது ஆதாரத்துடன் பேசுகிறேன், தனது மகன்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கான சிசிடிவி காட்சி வெளியானதை குறித்து மனோவின் மனைவி ஜமிலா

0
359
- Advertisement -

பாடகர் மனோ மகன்கள் மீது தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் மதுபோதையில் சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருந்தார்கள் என்கிற செய்தி தான் சோசியல் மீடியாவில் சமீப காலமாக பேசப்பட்டு வருகிறது. சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிருபாகரன் (20), மதுரவாயிலை சேர்ந்தவர் நிதிஷ் (16). இவர்கள் இருவருமே வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் உள்ள கால்பந்து ட்ரைனிங் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

-விளம்பரம்-

சில தினங்களுக்கு முன் ஒரு இரவில் இவர்கள் இருவருமே பயிற்சி முடிந்து வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் அருகே உள்ள உணவகத்தில் சாப்பாடு வாங்க சென்றிருந்தார்கள். அப்போது அங்கிருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் கிருபாகரன், ரித்தீஷ் ஆகியவரை குடிபோதையில் சரா மாறியாக தாக்கி இருந்தார்கள். இந்த சம்பவம் தொடர்பாக பாடகர் மனோவின் மகன்கள் சாஹிர் மற்றும் ரஃபீக் உட்பட ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து மனோ மகன்களின் நண்பர்கள் ஆன விக்னேஷ் மற்றும் தர்மா ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், மனோவின் இரண்டு மகன்கள் உட்பட மூன்று நபர்கள் தலைமறைவாக இருப்பதால் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

- Advertisement -

சிசிடிவி காட்சி:

இந்நிலையில் மனோவின் மகன்களும், புகார் அளித்த எதிர் தரப்பினரும் மோதிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்தக் காட்சியில் பாடகர் மனோவின் மகன்கள் சாஹிர் மற்றும் ரஃபீக் ஆகியோரை 4 இருசக்கர வாகனங்களில் வந்த 16 வயது சிறுவன் உட்பட 10க்கும் மேற்பட்டோர் கல், கட்டையால் கண்மூடித்தனமாக தாக்குகின்றனர். அவர்கள் தாக்கிவிட்டு தப்பு சென்ற பின்னரே சம்பவ இடத்திற்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் வந்துள்ளனர். தற்போது இந்த வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வருகிறது.

மனோவின் மனைவி ஜமிலா:

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாடகர் மனோவின் மனைவி ஜமிலா, என்னிடம் ஆதாரம் இல்லை என்பதால் தான் நான் இவ்வளவு நாள் பேசவில்லை. இப்போது ஆதாரம் இருப்பதால் பேசுகிறேன். இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கு உண்மை தெரியும். சம்பவம் நடந்த அன்று காவலர்கள் வந்த உடனே தாக்குதல் நடத்திய அனைவரும் ஓடிவிட்டனர். காலையில் அவர்களை அழைத்து வந்து மன்னிப்பு கேட்க வைப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள். ஆனால், என் மகன்கள் குறித்து தவறான வீடியோ வெளியாகியது. எனது மகன்களை அவர்கள் அடித்தது போல் எந்த ஒரு வீடியோவும் வெளியாகவில்லை.

-விளம்பரம்-

காவல்துறையினர் விசாரணை செய்யவில்லை:

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் எங்களிடம் சரியாக விசாரிக்கவே இல்லை. அவசர அவசரமாக வழக்கு பதிவு செய்தனர். இந்த ஒரு அசிங்கத்தால் தற்போது எங்களது மகன்கள் எங்கு உள்ளார்கள் என்பதே எனக்கு தெரியவில்லை. அவர்கள் இந்த வீடியோவை பார்த்து விட்டாவது வெளியில் வரவேண்டும். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது 16 வயது சிறுவன் என்று கூறுகிறார்கள் ‌. 16 வயது சிறுவன் என்றால் எந்த குற்றம் வேண்டுமானாலும் செய்யலாமா? என்று ஜமிலா கேள்வி எழுப்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து மனோவின் இரண்டாவது மருமகள் பேசினார்.

மனோவின் மருமகள் பேசுகையில்:

அப்போது அவர், எனது கணவரும் அவரின் அண்ணனும் ஏன் தவறாக பேசினீர்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தனர். அதற்குள் வாகனத்தில் வந்தவர்கள் தாக்க ஆரம்பித்து விட்டனர். கல், கட்டையெல்லாம் எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை. கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் எங்கள் பகுதியை சேர்ந்தவர்களே இல்லை. அதன் பின்னணியில் வேறு ஏதோ காரணம் இருக்கிறது. எனது மாமனாரின் பெயரை கெடுக்கும் நோக்கத்தில் தான் இவையெல்லாம் நடந்ததாக தெரிகிறது. எங்கள் வீட்டில் வேலை செய்தவர்களும் கடுமையாக தக்கப்பட்டுள்ளனர்‌ பாதுகாப்புக்காக நாங்கள் புகார் அளிக்க உள்ளோம் என்று கூறியுள்ளார்.

Advertisement