விஸ்வாசம் அப்டேட் இருக்கட்டும்..!சத்தமில்லாமல் இன்று நடந்த ‘சர்கார் ‘ அப்டேட் என்னனு பாருங்க..!

0
292

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள “விஸ்வாசம்” படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தான் தற்போது சமூக வலைதளமெங்கும் நிரம்பி வழிகிறது. இதற்கு மத்தியில் விஜய் நடித்துள்ள ‘சர்க்கார்’ படத்தின் அடுத்த அப்டேட் ஒன்றும் வெளியாகியுள்ளது.

இளைய தளபதி விஜய் நடித்துள்ள “சர்கார்” படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளத்தில் தீயாக பரவியது. மேலும், படத்தின் கதை காப்பி என்று ஒரு புறம் பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கு மறுபக்கம் சத்தமில்லாமல் படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளது படக்குழு.

இந்த படத்தின் அணைத்து பணிகளும் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் சென்சார் போர்டுக்கு அனுப்பட்டிருந்தது. மேலும், படத்தை பார்த்துவிட்டு படத்திற்கு “U/A” சான்றிதழை வழங்கியுள்ளது தணிக்கை குழு. இந்த தகவலை சன் பிக்ச்சர்ஸ் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

Sarkar

இதன் மூலம் சர்க்கார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவது உறுதி என்பது திட்டவட்டமாக தெரியவந்துள்ளது. மேலும், சர்கார் படத்தின் மீது திரைப்பட எழுத்தாளர் சங்கத்திடமும் உயர் நீதிமன்றத்திடமும் எழுத்தாளரும், துணை இயக்குனருமான வருண் ராஜேந்திரன் என்பவர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.