திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து சாந்தினி – நந்தா தம்பதியின் ஹாப்பி மூமென்ட்.

0
5332
chandini
- Advertisement -

எப்போதுமே சினிமா பிரபலங்களை விட சின்னத்திரை சீரியல் நடிகர்கள் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்கள். அந்த வகையில் தற்போது ஜீ தமிழ் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நந்தா மற்றும் சாந்தினி அவர்கள் தங்கள் புது வீட்டில் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்கள். ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருபவர்கள் நந்தா மற்றும் சாந்தினி.

-விளம்பரம்-
Chandini Tamilarasan (Actress) Wiki, Age, Biography, Husband, Movies list

நந்தா அவர்கள் சினிமா உலகில் நடன இயக்குனராகவும், பல ரியாலிட்டி ஷோக்களில் நடன இயக்குனராகவும் பணியாற்றி இருந்தார். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் கோகுலத்து சீதை என்ற தொடரில் கதாநாயகனாக நடித்து வருகிறார். நடிகை சாந்தினி அவர்கள் தமிழ் சினிமா உலகில் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டவர். இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான தாழம்பூ என்ற சீரியலில் மூலம் சின்னத்தில் நோக்கி பயணம் செய்தார். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் இரட்டை ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், நந்தா மற்றும் சாந்தினி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

இவர்கள் இருவருமே ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்துள்ளார்கள். இந்நிலையில் தற்போது இவர்கள் வீடு ஒன்று வாங்கியுள்ளார்கள். இந்த வீட்டிற்கான பூஜையும் போட்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் தற்போது பதிவிட்டு உள்ளார்கள். இதனை பார்த்த நந்தா மற்றும் சாந்தினி ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement