அப்பாவாக போகும் சந்திரலேகா சீரியல் நடிகர் – அட, இந்த சீரியல் நடிகை தான் இவர் மனைவியா.

0
1565
jaidhanush
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது.ராஜா ராணி, கடைக்குட்டி சிங்கம், ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. இதற்கு போட்டியாக சன் டிவியிலும் ரோஜா, அபியும் நானும் என்று பல சீரியல்கள் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சந்திரலேகா என்ற தொடர் மிகவும் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

-விளம்பரம்-

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வேதா நடித்து வருகிறார். மேலும், இந்த சீரியலில் ஹீரோவாக ஜெய் தனுஷ் என்பவர் நடித்து வருகிறார். 2014 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல் இதுவரை 1800 எபிசோடுகளை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலில் நடித்து வந்த ஜெய் தனுஷ் இடையில் விலகி பின்னர் மீண்டும் ரீ – என்ட்ரி கொடுத்தார்.

இதையும் பாருங்க : மேனகாவாக ஷகீலா, சகுந்தலாவாக மிளா – அன்னையர் தின ஸ்பெஷல் போட்டோ ஷூட்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இவரது மனைவி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜெய் தனுஷ்,  சீரியல் நடிகையாக வளம் வரும் நடிகை கீர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கீர்த்தி வேறு யாரும் இல்லை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நந்தினி ‘ சீரியலில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சில மாதங்களுக்கு முன் கர்ப்பமாக இருக்கிறார் என தகவல் வந்தநிலையில், தற்போது அவருக்கு வளைகாப்பு நடந்தியுள்ளனர். தனது மனைவியுடன் வாளைகாப்பு விசேஷத்தில் எடுத்த புகைப்படத்தை நடிகர் ஜெய் தனுஷ் வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

Advertisement