மேனகாவாக ஷகீலா, சகுந்தலாவாக மிளா – அன்னையர் தின ஸ்பெஷல் போட்டோ ஷூட்.

0
1074
mila
- Advertisement -

சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். அந்த அளவிற்கு இவருடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை. இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். இவர் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். கவுண்டமணியுடன் சில படங்களில் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்து இருந்தார். இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாள கரையோரம் ஒதுங்கி கவர்ச்சி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

-விளம்பரம்-

இவர் முதலில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தது மலையாள மொழி படங்களில் தான். அதனாலேயே இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சி விருந்து படைத்தவர். இளமை போன பின்னரும் இவர் ஷகீலாவாக பல படங்களில் நடித்து இருந்தார். கவர்ச்சி நடிகையாக இருந்த இவரை தற்போது அம்மா என்று சொல்லும் அளவிற்கு மாற்றியது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிதான்.

இதையும் பாருங்க : அன்னையர் தினத்தில் மறைந்த தனது அம்மாவுடன் இளம் வயதில் எடுத்த அறிய புகைப்படத்தை வெளியிட்ட கமல்.

- Advertisement -

அதே போல இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும் இவர் மிளா என்ற திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும், இவர் ஒரு ஆடை வடிவமைப்பாளராக வேலை செய்து வருகிறாராம். அதே போல இவர் சில சீரியல்களில் கூட நடித்து இருக்கிறாராம். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தியாகம், மருதாணி சீரியலில் நடித்துள்ளாராம்.

தனது சொந்த அம்மாவை விட ஷகீலாவை மீது தான் மிகுந்த பாசம் கொண்டுள்ளார் மிளா. மேலும், ஷகீலா எங்கு சென்றாலும் தற்போது மிளாவுடன் தான் சென்று வருகிறார். இப்படி ஒரு நிலையில் இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு ஷகீலா மற்றும் மிளா இருவரும் போட்டோ ஷூட் ஒன்றை நடாத்தியுள்னனர். அதில் ஷகீலா, மேனகாவாகவும், மிளா சகுந்தாலாவாகவும் கெட்டப் போட்டு அசந்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement