தொலைக்காட்சியில் தற்போது சீரியலில் நடித்து வரும் பல்வேறு நடிகர் நடிகைகள் ஆரம்பத்தில் சினிமாவில் நடித்தவர்கள்தான். அதிலும் சினிமாவில் வாய்ப்பு குறைந்து விட்டால் உடனே சீரியல் பக்கம் திரும்பி விடுவார்கள். இந்த வகையில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகைகள் கூட தற்போது சீரியலில் நடித்து வருகிறார்கள். இதே வரிசையில் சினிமாவிலிருந்து தற்போது சீரியலில் நடித்துவரும் நடிகைதான் ஸ்வேதா பண்டிட். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா என்ற தொடரில் நடித்து வருகிரும் இவரை யாரும் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை.
நடிகை ஸ்வேதா சென்னையில் உள்ள பிரபல பி எம் ஆர் கல்லூரியில் பொறியியல் படிப்பை படித்திருந்தார். ஆரம்பத்தில் ஒரு சில விளம்பர படங்களில் நடித்த இவருக்கு, இவரது அழகான தோற்றத்தினால் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் 2007 ஆம் ஆண்டு அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார்.
முதல் படமே தல படம் என்பதால் அடுத்த படத்திலேயே இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2008ஆம் ஆண்டு சத்யா நடிப்பில் வெளியான வள்ளுவன் வாசுகி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை இயக்குவது வேறு யாருமில்லை மம்முட்டி நடிப்பில் வெளியான மறுமலர்ச்சி படத்தை இயக்கிய பாரதிதான்.ஆனால், இந்த படம் பெரும் தோல்வியை தழுவியதால் நடிகை ஸ்வேதாவிற்கு அடுத்தடுத்து கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி துணை கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். இதுவரை 9 திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்வேதா இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘பூலோகம்’ படத்தில் நடித்திருந்தார் அந்த படத்தில் மல்யுத்தம் நடக்கும் போட்டியில் போட்டி அறிவிப்பாளராக ஒரே ஒரு காட்சியில் மட்டும் தோன்றி இருந்தார். இவருக்கு சினிமா கை கொடுக்கவில்லை என்றாலும் சின்னத்திரை நன்றாகவே கை கொடுத்தது.
மேலும், சிந்தால் சோப், உதயகிருஷ்ணா அசல் நெய் போன்ற விளம்பரங்களிலும் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்பு குறையவே 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மகள்’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன் பின்னர் சந்திரலேகா, நிலா போன்ற பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது நடித்து வரும் சந்திரலேகா தொடர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடி வருகிறது.