தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க காமெடி நடிகர்களில் சார்லியும் ஒருவர். கிட்டத்தட்ட 700 தமிழில் படங்களில் காமெடியனாக நடித்துள்ளார் இவர். தனது ஆரம்ப காலத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் 90களில் நடித்த சில படங்களுக்குப் பிறகு ஒரு நல்ல காமெடி நடிகராக கால் பதித்தவர் சார்லி. தற்போது நடிகராக வயதான சார்லி அவரது தந்தையை ரோல் மாடலாக வைத்து வாழ்பவர்.பெரிதாக சம்பளம் இல்லை என்றாலும் சார்லி. சம்பளத்தை வைத்து பிறருக்கு உதவி வாழ்பவர் சார்லி. பெரிதும் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உள்ள இவர் தனது வீட்டில் பல நூறு புத்தகங்கள் வைத்துள்ளார்.
மற்றவர்களுக்கு உதவும் சார்லி :
உலக இலக்கியங்கள், உலக சினிமா அனைத்தையும் விரல் நுனியில் தெரிந்து வைத்திருப்பவர் சார்லி. ஏழ்மையாக இருக்கும் மாணவர்களுக்கு படிப்பிற்காக உதவும் பழக்கம் உடையவர் சார்லி, தனது அப்பாவைப் போலவே ஆசிரியையாக ஆசைப்பட்டவர் தற்போது நடிகராகி விட்டதாகவும், படிக்க சொல்லிக்கொடுத்தால் தான் ஆசிரியர் என்று இல்லை படிக்க உதவினாலும் ஆசிரியர் தான் எனக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவார்.தற்போது குணச்சித்திர நடிகராக வலம் வரும் இந்த புனித உள்ளம், அப்பாவாக நடித்து பல படங்களில் முத்திரை பதித்துள்ளது.
செய்தியாளரின் கேள்வி :
இந்நிலையில் வினோத ராஜேந்திரன் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டு வரும் பைண்டர் திரைப்படத்தின் தலைப்பு வெளியிட்டு விழாவானது சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் நடிகர் சார்லி கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சார்லியிடம் செய்தியாளர் ஒருவர் நீங்கள் சினிமாவில் நடிப்பது குறைந்து விட்டது அது ஏன்? சினிமா உங்களை மறந்து விட்டதா? இல்லை சினிமாவை நீங்கள் மறந்து விட்டீர்களா? என்று செய்தியாளர் ஒருவர் கேட்டிருந்தார்.
நடிகர் சார்லி கூறியது :
அதற்கு பதிலளித்த நடிகர் சார்லி கூறியதாவது `நான் சினிமாவில் கிருமி, மாநகரம் போன்ற படஙக்ளுக்கு பிறகு என்ன கதாபாத்திரத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறோம் எவ்வளவு நேரம் திரையில் இருக்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். அதனால் 5 நாட்களை விட 15 நாட்கள் நடிக்கக்கூடிய நீண்ட திரை நேரம் கொண்ட படங்களில் மட்டும் தான் நடித்து வருகிறேன். அதனால் நான் சில திரைபடங்களை தவிர்க்கிறேன் ஆனால் அது என்னுடைய திரைவாழ்க்கைக்கு நல்லது. இதனால் நான் திரைத்துறையில் ஒரு கட்டத்தில் இருந்து மற்றொரு கட்டத்திற்கு சென்று சென்றுகொண்டிருக்கிறேன்.
லைன் மேன் படம் :
மேலும் தற்போது நான் “லைன் மேன்” என்ற படத்தில் நடித்து வருகிறேன் இப்படமானது தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பளத்தில் வேலை செய்யக்கூடிய ஒரு தொழிலாளரின் கதை. இத்திரைப்படத்தை இயக்குனர் உதயகுமார் இயக்கி வருகிறார் ஆனால் அவருக்கு இப்படம் தான் முதல் படம். இருந்தாலும் தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்து செல்லும் அளவிற்க்கு லைன் மென் படத்தை இயக்கியிருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் உதயகுமார் என்று பாராட்டினார்.
நடித்து வரும் திரைப்படங்கள் :
அதோடு இயக்குனர் சுரேஷ் இயக்கத்தில் “எறும்பு” என்கின்ற படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். அபபடமும் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படங்களை தவிர நயன்தாரா, ஜெயம் ரவி இயக்குனர் அகமத் இயக்கத்தில் மற்றொரு படம், நடிகர் ஜீவா, ராட்சிக்கண்ண , இயக்குனர் பா.விஜய் அவர்களுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். இதுபோல நட்சத்திரங்களில் இணைந்து நடிக்கும் திரைப்படங்களில் மட்டும் தான் நடித்து வருகிறேன். அதே போல இயக்குனர் வினோத் ராஜேந்திரன் எனக்கு அறிமுகமே இல்லாதவர், ஆனால் அவர் என்னை இந்த “பைண்டர்” என்ற படத்தில் நடிக்க விரும்புகிறார் என்று கூறினார். மேலும் நான் கதாபாத்திரங்களில் நடிக்க தேடாமல் கதாபத்திரம் என்னை தேடி வருகிறது. அது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்று நடிகர் சார்லி கூறினார்.