என் சொத்தை ஏமாற்றி எடுத்துக்கொண்டார் சரத் பாபு.! பிரபல நடிகை பரபரப்பு புகார்.!

0
926

ரஜினி கமல் ஆரம்ப காலகட்டத்தில் முக்கிய குணசித்ர நடிகராக விளங்கி வந்தவர் நடிகர் சரத் பாபு. தமிழில் 1977 ஆம் ஆண்டு ‘பட்டின பிரவேசம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். முள்ளும் மலரும் படத்தில் ரஜினினியுடன் நடித்திருந்தார்.

பின்னர் அண்ணாமலை படத்தில் ரஜனியின் நண்பனாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் கதாநாயகனாக பல படங்களில் நடித்தார் சரத் பாபு. அதே போல் ரஜினி, கமல் ஆகியோரோடு இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

- Advertisement -

நடிகர் சரத் பாபு 80களில் பிரபல தெலுங்கு நடிகை ரமா பிரபா என்பவருடன் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்தார். சென்னையில் உள்ள அந்த நடிகையின் சொத்துக்ளை சரத்பாபு ஏமாற்றி பறித்துவிட்டார் என நடிகை புகார் அளித்துள்ளார்.

ஆனால், இதுகுறித்து விளக்கமளித்துள்ள சரத் பாபு,
நான் என் விவசாய நிலங்களை விற்று அவருக்கு உமாபதி தெருவில் அவருக்கு ஒரு வீடு வாங்கி கொடுத்தேன். அவரின் மற்ற வீடுகளுக்கும் லட்சக்கணக்கில் செலவு செய்து புதுப்பித்தேன். நான் அவருக்கு வாங்கி கொடுத்த வீட்டை தான் திருப்பி எடுத்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement