அதான் முக்கியம்னு இந்த முடிவ எடுத்து இருப்பா – Cwcயில் இருந்து மணிமகேலை விலகிய காரணம் குறித்து சொன்ன தாமு.

0
846
- Advertisement -

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறிய காரணம் குறித்து குக் வித் கோமாளி செஃப் தாமு சமீபத்தில் கொடுத்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற காரணமே கோமாளிகள் தான். அதிலும் இந்த நிகழ்ச்சியில் புகழ், குரேஷி, பாலாவிற்கு அடுத்தபடியாக மணிமேகலை தான் காமெடியில் கலக்கி வந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகி இருப்பதாக அறிவித்து இருந்தார்.

- Advertisement -

வெளியேறிய மணிமேகலை :

இதுகுறித்து அறிவித்து இருந்த அவர் ‘ ‘இன்று குக் வித் கோமாளியில் என்னுடைய கடைசி எபிசோடு. ‘நான் வரமாட்டேன்’ என நானே வருவேன் கெட்டப்பில் அறிவிக்கிறேன்.2019ல் தொடங்கிய முதல் சீசனில் இருந்து நீங்கள் எனக்கு குக் வித் கோமாளிக்காக அதிக அளவு அன்பை பொழிந்துகொண்டிருக்கிறீர்கள். அதற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.எனக்கு கொடுக்கப்படும் வாய்ப்புகளில் நான் எப்போதும் பெஸ்ட் ஆக இருக்க அதிக அளவு efforts போட்டிருக்கிறேன்.

குக் வித் கோமாளியின் உங்களை entertain செய்ய கொஞ்சம் justice செய்திருக்கிறேன். உங்களிடம் இருந்து எதிர்பார்க்காத அளவுக்கு அன்பு கிடைத்தது, அது நான் செய்யும் மற்ற விஷயங்களிலும் இருக்கும் என நம்புகிறேன். என்று பதிவிட்டுள்ளார். மணிமேகலையின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் பலரும் ஏற்கனவே பாலா இல்லை என்பதால் இந்த சீசன் கொஞ்சம் போராக சென்று கொண்டிருக்கிறது. தற்போது நீங்களும் சென்று விட்டால் எப்படி என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

கர்ப்பமாக இருப்பதால் வெளியேறினாரா :

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற புகழிடம், மணிமேகலை கர்ப்பமாக இருப்பதால் தான் நிகழ்ச்சியில் இருந்துவெளியேறிவிட்டாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி 4 சீசன்களை கடந்தாலும் நான்கு சீசன்களாக தவறாமல் இடம்பெற்றது மணிமேகலை மட்டும் தான். இப்படி ஒரு நிலையில் கலந்து கொண்ட தாமுவிடம் மணிமேகலை விலகியது குறித்து கேட்கப்பட்டது.

செஃப் தாமு கூறியது :

அதற்கு பதிலளித்த செஃப் தாமு மணிமேகலை விலகியது குறித்து பேசியிருந்தார். அவர் கூறுகையில் “மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு விலகியது எங்களுக்கு பெரிய இழப்பு தான். அவருடைய நகைச்சுவை எனக்கு மிகவும் பிடிக்கும். குக் வித் கோமாளியில் இருந்து விலகியது முழுக்க அவரது விருப்பம். அதை நான் முழுவதுமாக மதிக்கிறேன் என்று கூறினார். மேலும் மணிமேகலை வெளியேறியதற்கான காரணம் குறித்து கேட்டபோது “மணிமேகலை ஆங்கரிங் போன்ற பிற விஷியங்களில் விருப்பம் இருப்பவராக எனக்கு தெரிந்தார். அவருடைய எதிர்காலம் மிகவும் முக்கியமானது. அதனால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று கூறினார் செஃப் தாமு.

Advertisement