இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள “செக்க சிவந்த வானம்” திரைப்படம் இன்று (செப்டம்பர் 27) வெளியாகியுள்ளது. இந்த படத்தை பற்றிய விமர்சனத்தை இங்கே காணலாம்.

Advertisement

படம்: செக்க சிவந்த வானம்

இயக்குனர்: மணிரத்னம்

Advertisement

நடிகர்கள் மற்றும் கதாபத்திரம் :- அரவிந்த்சாமி(வரதன்), சிம்பு(எதி), விஜய் சேதுபதி(ரசூல்), அருண் விஜய்(தியாகு ), பிரகாஷ் ராஜ்(சேனாதிபதி), ஜோதிகா(சித்ரா), ஐஸ்வா்யா ராஜேஷ்,அதிதி ராவ்,ஜெயசுதா,மன்சூா் அலிகான்

Advertisement

தயாரிப்பு: லைகா ப்ரோடக்க்ஷன்

வெளியான தேதி: 27-09-2018

கதைக்களம்:

இந்த படத்தின் முக்கிய கதையே சேனாபதிபதி என்ற கதாபாத்திரத்தை வைத்து தான் நகர்கிறது. ஒரு மிகப்பெரிய கெங்ஸ்டர் டானாக இருந்து வருகிறார் சேனாதிபதி. அவருக்கு வரதன், எதி, தியாகு என்று மூன்று மகன்கள் இருக்கின்றனர். சேனாதிபதியின் நண்பராக காவல் அதிகார ரசூல் இருந்து வருகிறார். சேனாதிபதிக்கு பிறகு அந்த இடத்தை யார் பிடிப்பது என்பது தான் இந்த படத்தின் கதை.

வரதன் மட்டும் சேனாதிபதியுடன் இருந்து வர வரதனின் தம்பிகளான எத்தி மற்றும் தியாகு ஜாலியாக இருந்து வருகின்றனர். சேனாதிபதியை கொள்ள ஒரு கும்பல் திட்டம் தீட்டி வர ஒரு கட்டத்தில் சேனாதிபதி கொல்லப்பட்டு வருகிறார். இதனால் வரதன், எதி, தியாகு ஆகிய மூவருக்கும் சேனாதியின் இடத்தை பிடிக்க சண்டை வருகிறது. அத்தோடு தனது தந்தையை யார் கொன்றது, யார் அடுத்த சேனாதிபதியாக வந்தது என்பது தான் கதை.

இந்த படத்தில் வரதனின் மனிவியாக இருக்கும் சித்ரா தனது கதாபாத்திரத்தில் நன்றாக பொருத்தியுள்ளார். அதிலும் சேனாதிபதியின் நண்பராக இருக்கும் ரசூல் கதாபத்திரம் ஒரு சில காட்சிகளில் செய்யும் சேட்டைகளும், வசனங்களும் மாஸ், விஜய் சேதுபதியை தவிர ரசூல் கதாபாத்திரத்தை வேறு யாராவது செய்திருக்க முடியமா என்பது சந்தேகம் தான். மற்ற நடிகைகளான ஐஸ்வ்ர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஆகியோர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கால அளவும் நியாயமாக இருக்கிறது. இந்த விடயத்தில் மணிரத்னம் அணைத்து கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

பிளஸ்:

மணிரத்னம் படம் என்பதால் படத்தில் இருக்கும் ஒரு மரத்தை கூட நடிக்க வைத்து விடுவார், அதிலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனைவரும் கைதேர்ந்த நடிகர்கள் என்பதால் மணிரத்னத்துக்கு மிகவும் சுலபமாகவே அமைந்துவிட்டது. படம் முதல் பாதியில் விறுவிறுப்பாக டாப் ஸ்பீடில் சென்று விடுகிறது. ஒவ்வொரு கதாபத்திரத்தின் இன்ட்ரோ ரசிகர்களை கண்டிப்பாக கவரும். இரண்டாம் பாதி கொஞ்சம் தொய்வு தான். படத்தின் மிகப்பெரிய பலம் ஏ ஆர் ரகுமான் மற்றும் ஒளிப்பதிவு தான். இரண்டும் ரத்தமும் சதையுமாக ஒன்றோடு ஒன்று இணைத்து படத்திற்கு மேலும் உயிர் கொடுத்துள்ளது.

மைனஸ்:

ஆரம்பத்தில் விறுவிறுப்பாக செல்லும் கதைக்களம் இரண்டாம் பாதியில் கொஞ்சம் ஸ்லோவாகிவிடுகிறது. முதல் பாதியில் வசனமெல்லாம் மணிரத்னத்தின் ட்ரேட் மார்க். ஆனால் இரண்டாம் பாதியில் மாஸ் வசனம் என்று பேசும் வசனங்கள் அந்த அளவிற்கு அழுத்தமாக இல்லை. இருப்பினும் இரண்டாம் பாதியின் இறுதியில் கதையை முடித்த விதம் மணி ரத்னத்தின் அனுபவத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. படத்தின் மைனஸ் என்றால் இரண்டாம் பாதியில் ரசிகர்களின் பொறுமையை கொஞ்சம் சோதிக்கிறது.

இறுதி அலசல்:

தளபதி, நாயகன் போன்ற கெங்ஸ்டர் படங்களை எடுத்த மணிரத்னம் நீண்ட நாட்கள் கழித்து ஒரு அற்புதமான கெங்ஸ்டர் கதையை அளித்துள்ளார். ஆக்ஷன், பாசம், துரோகம், துப்பாக்கி சத்யம், ரத்தம் என்று கெங்ஸ்டர் படத்திற்கு உண்டான அணைத்து அம்சங்களும் நிறைந்துள்ள ஒரு படம் மணிரத்னம் ரசிகர்களுக்கு இது ஒரு ட்ரீட் என்பதில் ஐயமில்லை.

மொத்தத்தில் இந்த படத்திற்கு Behind Talkies சார்பாக அளிக்கும் மதிப்பெண் 3/5

Advertisement