செக்க சிவந்த வானம் இந்த படத்தின் காப்பியா..? ஆதாரத்துடன் வெளியான புகைப்படம்.! மணிரத்னம் சார் என்ன இது..?

0
1050
chekka-chivantha-vaanam
- Advertisement -

கார்த்திக் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘காற்று வெளியிடை’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம், ‘செக்கச் சிவந்த வானம்’. தமிழ் சினிமா வரலாற்றில் மல்டி ஹீரோஸ் இணைந்து நடிக்கும் படமாக இது உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக்கவருகிறது.

-விளம்பரம்-

chekka Chivandha vaanam

- Advertisement -

மேலும், இந்த படம் கடந்த 2013 ஆம் ஆண்டு ” நியூ வேர்ல்ட் ” என்ற கொரியன் படத்தின் காபி என்று பலரும் விமரிசித்து வருகின்றனர். நியூ வேர்ல்ட் படத்தின் கதை என்னவெனில் ஒரு பெரிய டான் ஒரு வழக்கில் இருந்து விடுதலை பெற்று வெளியவந்து வீட்டுக்குப் போயிட்டு இருக்கிறார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக ஒரு லாரி விபத்து நடக்குது, அதில் அடிபட்டு ஹாஸ்பிடல்ல ரொம்ப சீரியசான கட்டத்தில் அட்மிட் செய்யப்படுகிறார்.

அவருக்கு அடுத்து அந்த இடத்திற்கு யார் யாரெல்லாம் வருவார்களோ அவர்களுக்கெல்லாம் தகவல் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் இரண்டு டான் மத்தியில் சண்டை வருகிறது. இதற்கிடையில் போலீஸ்க்காரர் ஒருவர் அந்த கேங்கிற்குள் அண்டர்கவர் ஏஜென்ட்டாக இருந்து வருகிறார்.அந்த அண்டர்கவர் ஏஜென்ட் வெளியூரில் இருந்து வரும் டானுடைய வலது கை. இவர்கள் எல்லாம்தான் அந்தப் படத்தினுடைய முக்கியமான கதாபாத்திரங்கள்.

-விளம்பரம்-

ccv

இந்த படத்தின் கதையை தழுவி தான் மணிரத்னம் “செக்க சிவந்த வானம்” படத்தை இயக்கியுள்ளார் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால், “நியூ வேர்ல்ட்”படத்தில் முக்கிய கதாபாத்திரமே அண்டர்கவர் ஏஜென்ட்டாக வரும் அந்த காவல் அதிகாரி தான். அவரை மையமாக வைத்துக் தான் கதையே நகரும். ஆனால், “செக்க சிவந்த வானம்” படம் டானாக இருக்கும் ஒரு அப்பாவின் இடத்தில் வர போராடும் மகன்களின் கதையாக இருக்கிறது.

ccv-1

ccv-3

ஏற்கனவே 1974 ஆம் ஆண்டு வெளியான ‘காட் பாதர் ‘ மாபெரும் வெற்றியடைந்த படத்தை காப்பி அடித்தது தான் மணிரத்தினம் இயகத்தில் 1987 ஆம் ஆண்டு கமல் நடித்த”நாயகன்” படத்தை எடுத்தார் என்று அப்போதே சில கருத்துக்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது “நியூ வேர்ல்ட்” தழுவி கதையை மணிரத்தினம் மீண்டும் கையாண்டுள்ளார் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement