இக்கட்டான சூழலில் 84 மணி நேரத்தில் 3450 கி.மீ. மிசோரம் மக்கள் மத்தியில் ஹீரோவான சென்னை ஓட்டுநர்.

0
1765
chennai
- Advertisement -

சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி லட்சக்கணக்கான மக்களின் உயிரைபறித்து விட்டது. உலக மக்கள் அனைவரும் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தில் உள்ளார்கள். தற்போது இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31000 தாண்டியது மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை 1007 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார்கள். ஊரடங்கு உத்தரவால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும், திரையரங்கள், பொது இடங்கள்,போக்குவரத்து என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.

-விளம்பரம்-

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இறந்த இளைஞரின் உடலை மிசோரம் வரை ஆம்புலன்ஸில் எடுத்து சென்று அவரது உறவினர்களிடம் ஓட்டுநர் ஒப்படைத்த சம்பவம் நெஞ்சை நெகிழ வைத்து உள்ளது.

- Advertisement -

விவியன் லால்ரம்செங்கா என்ற இளைஞர் ஒருவர் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது இந்த இளைஞனுக்கு 28 வயது தான் ஆகிறது. இந்த இளைஞர் சென்னையில் தங்கி உள்ளார். இந்நிலையில் அந்த இளைஞர் சமீபத்தில் மாரடைப்பால் இறந்து உள்ளார். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால் அந்த இளைஞர் உடலை எடுத்து செல்ல பல சிக்கல்கள் ஏற்பட்டது.

நாடு முழுவதும் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதற்காக அனைத்து வித போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அந்த இளைஞரின் உடலை அவரது சொந்த ஊரான மிசோரம் தலைநகர் ஐஸ்வாலுக்கு கொண்டு செல்வதில் பல சிக்கல்கள் ஏற்பட்டது. இதனை அடுத்து இளைஞர் விவியன் உடலை ஆம்புலன்ஸ் மூலம் சென்னையிலிரு்து மிசோரமுக்கு கொண்டு செல்ல முடிவுவெடுக்கப்பட்டது.

-விளம்பரம்-

பின் சென்னையில் உள்ள மிசோ நல சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மூலம் தான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. பிறகு இளைஞர் விவியன் உடலை ஆம்புலன்சில் எடுத்து கொண்டு சென்றார்கள். பின் ஆம்புலன்ஸ் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) அன்று மிசோரம் தலைநகரை சென்றடைந்தது. அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், இறந்த இளைஞர் விவியன் உடலை சென்னையிலிருந்து அவரது சொந்த ஊருக்கு கொண்டு போய் சேர்க்க சுமார் 3,450 கிலோமீட்டர் தொலைவுக்கு ஓட்டி சென்றார்.

Image

பின் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இறந்த இளைஞரின் உடலை அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைத்தார். ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் இந்த செயலை பார்த்து அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கண்ணீர் மல்க பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்தனர். தற்போது இந்த நியூஸ் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement